உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் -18

7. பாலை வெளி

பாலைவெளி என்பது புல் பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் வளராத மணல் நிலமும், பாறை நிலமும் ஆகும். நிலம் நன்றாய் நனைந்து வளம்பெறாததாய் வேண்டும் அளவு மழை பெய்யாமலும் கீழே நீரூற்றுகள் இல்லாமையாலும் பச்சைப் பயிர்கள் சிறிதும் வளராத பெருநிலப் பரப்புகளே பாலை நிலங்கள் என்று சொல்லப்படுகின்றன. உயிர் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் எந்தப் பயிரும் இவற்றின்கண் நிலை பெறாமையால், வேறு சிற்றுயிர்களும், விலங்குகளும், மக்களும் இப்பாலைவெளிகளில் காணப்படுவ தில்லை. நிலத்தின் கீழ் ஆழமாக வேர் ஊன்ற வல்லனவும் மழையினுதவியை எதிர்பாராமலே வளரத் தக்கனவுமான சப்பாத்திக் கள்ளி அல்லது நாகதாளி என்னும் முட் செடிகளும் இவற்றை ஒத்த வேறு சில செடிகளுமே சில பாலை வெளிகளில் செழிப்பாகக் காணப்படுகின்றன. 'எட்டி பழுத் தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன என்னும் பழமொழிப்படி இந் நாகதாளிச் செடிகள் மக்களுக்கும் பிற க்கும் பிற உயிர்களுக்கும் பெரும்பாலும் பயன்படுதல் இல்லாமையால், வறண்டு வற்றிய பாலை நிலங்களுக்கு ஏற்ற செடிகள் இவையே ஆகும்.

மழையும் ஆறும் ஏரியும் குளமும் நீரூற்றும் மலிந்த இத்தென்னாட்டின்கண் வறண்ட பெரிய பாலைவெளிகள் எங்குமேயில்லை. திருச்செந்தூர் இராமநாதபுரப் பக்கங் களில் காணப்படும் நெய்தல் நில மணற் பரப்புகளைப் பாலைவெளி என்று கூறுதல் ஆகாது. ஏனென்றால், அம் L மணற்பாங்குகளில் பனை தென்னை உடை கருவேல் முதலான மரங்களும், எல்லா உயிர்களுக்கும் பயன்படத்தக்க ஏனை பயிர்ப் பச்சைகளும் செழுமையாய் வளர்ந்து பயன்தரக் காண்கின்றோம். இத்தென்னாட்டிற்கும், இதனை அகத் தடக்கிய இவ்விந்திய நாட்டிற்கும் புறம்பே உள்ள நிலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/77&oldid=1584691" இலிருந்து மீள்விக்கப்பட்டது