உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

45

பகுதிகளிலேதாம் எட்டுணையும் பயன்படாப் பெரிய பெரிய பாலை வெளிகள் அமைந்திருக்கின்றன. இப்பாழ் நிலங்கள் பெரும்பாலும் இந்நிலவுலகத்தின் மேல்பால் எல்லையி லேயே காணப்படுதலை நினைவில் வைத்தல் வேண்டும். இந்நிலவுலகத்தில் காணப்படும் பெரும் பாலைவெளிக ளாவன; சகாரா, கலகாரி, கொலொராடோ, ஆதகாமா, மேல் ஆத்திரேலியா, கோபி முதலானவைகளே ஆகும்.

6

இவை தம்முள் சகாரா என்னும் பாலைவெளியே உலகத்தில் மிகப் பெரியது. இஃது ஆப்பிரிக்கா தேயத்தின் வடபகுதியில் உள்ளது. இதன் நீளம் மூவாயிரம் மைல், அகலம் யிரம் மைல் என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் மஞ்சள் நிறமான புதைமணல் வாய்ந் தது. இதன்கண் வீசுங் கடும் சுழற்காற்று இதன் மணலை மலை போல் மேலெழுப்பிச் சுழற்றிக் கொண்டு செல்லும் தோற்றமானது. மஞ்சள் மலையொன்று மேலெழுந்து விரைந்து சுழல்வதையே ஒத்திருக்கும். இங்ஙனம் எழுந்து சுழலும் மணற் குன்றானது ஒரோவொருகால் அப்பாலை வெளியில் வழிச் செல்லும் வணிகர் குழுவை அப்படியே தன்னுட் புதைத்து டுதலும் உண்டு. அதனால் அவ்வெளியினூடு செல்லும் வணிகர் கூட்டங்கள் அக்காற்று வீசாத காலம் பார்த்தே அதன்கட் செல்வர். மேற்குறித்த சுழற் காற்றினால் ஆங்காங்குத் தாகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கும் மணற் குன்றுகள் இப்பாலை நிலமெங்கும் காணப்படுகின்றன. இவைகளுட் சில கடல் மட்டத்திற்கு மேல் ஆயிர அடி உயரமுள்ளனவாகவும் இருக்கின்றன. இம்மணற் குன்றுகளே அன்றிச் சிவந்த மலைப் பாறைகளும் வ் வளியின் டையிடை யிடையே சிதறித் தோன்றுகின்றன. இம்மலைப் பாறைகளுக்கும் மணற் குன்றுகளுக்கும் நடுவே பள்ளத் தாக்குகளும் உள்ளன. நீர்ப்பசை அற்று வறண்டு எந்தப் பக்கத்தில் பார்த்தாலும் மணலும் மணற்குன்றுகளும் மலைப்பாறைகளும் உடையதாய் கதிரவன் வெப்பத்தால் அழன்று கனலாயிருக்கும். இப்பெருமணற் பரப்பானது நோக்குவார்க்கும் தன்னூடு வழிச் செல்வார்க்கும் பெருநடுக்கத்தை விளைவிப்பது எனினும், இஃது ஃது இடை யிடையே ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் கொழுமையான பேரீச்ச மரத் தோப்புகளும் இளமரக் காக்களும் வாய்ந்துள்ளன என்றால் எவர்க்குதாம் வியப்புண்

டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/78&oldid=1584692" இலிருந்து மீள்விக்கப்பட்டது