உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

46

மறைமலையம் 18

L

டாகாது? இது கொண்டு எத்தனைக் கொடிய இயற்கை யமைப்பிலும் உயிர்களுக்கு இனியவான மென்தன்மைகள் உள்ளடங்கி இருக்குமென்பது இனிது புலனாகின்றதன்றோ? உயிரைக் கொள்ளை கொள்ளும் கொடிய நெருப்புக் காற்றுக்கும் கதிரவன் வெப்பத்திற்கும் அஞ்சாமல் அவற்றையும் ஊடுருவி வரும் அரும் பெருமுயற்சியுடையார்க்கு, ஆண்டவன் தன் தண்ணருளை வழங்கும் அடையாளமாகவே, வளப்பம் மிகுந்த இத்தோட்டங்களைத் தருதல் வேண்டும். இவற்றின் கண் ஓவாது சுரந்து ஒழுகும் நீர் ஊற்றுகளும் அவற்றால் நீர் நிறைந்து நிற்கும் வாவிகளும் பால்போலுந் தீஞ்சுவை அமிழ்தை, நாவறண்டு உடல் கரிந்து வரும் வழிப்போக்கர்க்கு ஊட்டு கின்றன; இவற்றில் செழுமையாய் வளர்ந்து பச்சைப் பசேலென நிற்கும் பேரீச்ச மரங்கள் அத்தி மரங்கள் நாரத்தை மரங்கள் கொடி முந்திரிக் கொடிகள் முதலியன, தம்மகத்துக் குலை குலையாய் தாமாகவே பழுத்துத் தொங்கும் கற்கண்டு அனைய கனிகளை ஏராளமாய்த் தந்து அவர்தம் கடும் பசியை ஆற்றுகின்றன. இவைகளே அன்றி, நெல்லும் வேறு சில பயறுகளும் கூட அவ்இளமரக்காக்களின் ஊடே ஊடே தாமாகவே செழிப்பாய் வளர்ந்து வழிச் செல்வார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை உதவுகின்றன.

இப்பெரும் பாலைவெளியினூடு அஞ்சா நெஞ்சினராய் வழிச் செல்லும் வணிகர் யாவர்? அவர் எவ்வாறு அப்புதை மணற்பரப்பைக் கடந்து செல்கின்றனர்? என்னும் வினா இயல்பாக எழுமாதலால், அவற்றிற்கு விடையும் சிறிது இங்கு இயம்புவாம். இப்பாலை நிலத்திற்குக் கிழக்கெல்லையிலுள்ள அரேபியா தேயத்து அராபிக்கார வணிகர்களே தம் பெண்டு பிள்ளைகளுடன் அம்மணல்வெளியைக் கடந்து செல்கின்

றார்கள்.

இவர்கள் அதன் ஊடு செல்வதற்குப் பயன்படுத்துவன ஒட்டகங்களே ஆகும். ஒட்டகத்தைத் தவிர வேறு எந்த விலங்கும் புதைமணலிற் பெருஞ் சுமைகளைச் சுமந்து கொண்டு கடவாது. னென்றால் ஒட்டகத்தின் காலடிகள் அகலமாய் பிளவின்றி உரலடி போல் சப்பையாய் தசை மிகுந்து இருத்தலால் அவை மணலுள் அழுந்தா; மற்றும், குதிரைக் குளம்படிகள் குறுகலாய் கெட்டியாய் இருத்தலாலும், மாட்டின் குளம்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/79&oldid=1584693" இலிருந்து மீள்விக்கப்பட்டது