உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

47

பிளப்புள்ளனவாய் அங்ஙனமே சிறியவாய் கெட்டியாய் இருத்தலாலும் அவ் இருவகை விலங்குகளின் கால்களும் புதைமணலிற் புதைந்துவிடும்; ஆகையால், இவை மணல் வெளிகளில் நடவா. ஆனது பற்றியே அராபி வணிகர்கள் இம்மணல் வெளியினூடு செல்வதற்கு ஒட்டகங்களையே பழக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒட்டகங்கள் பசுந்தழைகளையும், தண்ணீரையும் தவிர வேறு எதனையும் உட்கொள்வதில்லை; அதனால் அவற்றை வளர்ப்பவர்க்குச் செலவு சிறிதுமே இல்லை. அது அல்லாமலும், ஒட்டகமானது ஓரிடத்தில் தண்ணீர் பருகினால், திரும்பப் பல நாட்கள் வரையில் தண்ணீர் வேண்டாது; ஏனென்றால், அதன் வயிற்றகத்தேயுள்ள தண்ணீர்ப்பை ஒரு பெரிய குடத்தின் அளவுள்ளது; ஓரிடத்திற் பருகிய நீரினால் அஃது அதனை நிரப்பிக் கொள்ளுமாயின், அது நீர்விடாயின்றிப் பல நாட்கள் உயிர்வாழ வல்லது. ஆகவே, நூற்றுக்கணக்கான மைல் வரையில் தண்ணீர் சிறிதும் கிடைக்கப் பெறாத சகாராப் பாலை வெளியில் எத்தனையோ திங்கள் வழிச் செல்ல வேண்டியவர் களான அராபி வணிகர்க்கு ஒட்டகத்தினும் பயன்படும் வேறொரு விலங்குண்டோ! ஆகவே, அராபி வணிகர்கள் தம்முடைய ஒட்டகங்களின் மேல் அம்பாரி கட்டி, அதில் தம் பெண் பிள்ளைகளையும், உணவுப் பண்டங்களையும், வணிகச் சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு, இப்பாலை நிலத்தினூடு நெடுவழி செல்வார்கள். இவ்வணிகர்கள் இதன்கண் ஒருவர் இருவராய் செல்லார்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வணிகர்கள் ஒருங்கு சேர்ந்துகொண்டுதான், அஞ்சத்தக்க இந்நெடுவழியில் செல்வார்கள். ஒட்டகங்களின் மேல் ஒருவர் பின் ஒருவராய் தேர்வடம் பிடித்தாற்போல் இவ்வணிகர் குழாஞ் செல்வதைக் காணுங்காட்சி பெரியதொரு புதுமையாய் வேடிக்கையாய் இருக்கும்.

இவ்வ

வ்வாறு செல்லும் அராபி வணிகர்கள் நூற்றுக்கணக் கான மைல் கடந்து சென்று, இப்பாலைவெளியின் இடை யிடை யே உள்ள வளவிய பசுமரத் தோட்டங்களில் சில நாட்கள் தங்கித் தங்கி இளைப்பாறிக், கடைசியாகப் பல முகமாய்ப் பிரிந்து, இப்பாலை நிலத்தின் மேல் விளிம்பைச் சூழ விளங்கா நிற்கும் நகரங்களுள் சென்று தாம் கொண்டு சென்ற சரக்கு களை விலைசெய்து விட்டு, அவ்வந்நகர்களில் கிடைக்கும் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/80&oldid=1584694" இலிருந்து மீள்விக்கப்பட்டது