உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் -18

பண்டங்களை ஏற்றிக் கொண்டு, சென்ற வழியே திரும்பித் தம் ஊர்க்கு மீள்வர். இங்ஙனமாக இச்சகாராப் பெரும் பாலை ல நிலமும் அராபி வணிகரின் வாணிகச் செலவுக்குப் பயன்படுதல் கண்டு கொள்க.

இப்பாலைவெளியின் இடையிடையே அமைந்துள்ள கொழுவிய பசுமரத் தோட்டங்களில் கொடிய கொள்ளைக் காரர்கள் குடியிருந்து கொண்டு வழிப்பறி செய்வது வழக்கம். ஆயினும், அராபி வணிகர்கள் படைக்கலன்கள் பூண்டு பெருங் கூட்டமாய்ச் செல்லத் துவங்கிய பின், அக்கொள்ளைக்காரரின் கொட்டம் அடங்கியது. சகாரா நிலத்திற்கும் அதனைச் சூழ்ந்த நகர்கள் பலவற்றிற்கும் உரியவரான பிரஞ்சு அரசியலாரும், கூட்டங்களின் குறும்பை அடக்கி, அப்பாலைவெளி நெடுகப் புகைவண்டி விடுதற்கும், பாட்டை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அக்கொள்ளைக்

இனிச், சகாராவுக்குப் பிற்சொல்லப்பட்டதாகிய ‘கலகாரி' என்னும் பாலைவெளி, தென்னாப்பிரிக்காவில் நாரத்தையாற்றிலிருந்து (Orange) அறுநூறு மைல் நீளமுடைய கிடக்கின்றது. இதில் உப்பளங்கள் மிகுதியாய்

தாகக் இருக்கின்றன.

தில்

இனிக், 'கொலொராடோ' என்னும் பாலை நிலம், வட அமெரிக்காவின் இணையரசு நாடுகளின் மேற் பகுதியில் தொகுதி தொகுதியான மலைத் தொடர்கள் வாய்ந்ததாய்ப் பசுமரம் ஏதுமின்றிப் பாழாய்க் கிடக்கின்றது. ஆனாலும், இதன் மையத்தில் உள்ள மலைகள் மட்டும் அருவி நீரும், அதனாற் செழுமையான காடுகளும் உடையதாய்த் திகழ்கின்றன.

இனி, 'ஆதகாமா' என்னும் பாலைவெளி தென்னமெரிக் காவில் வடசில்லி நாட்டை அடுத்துள்ளது. இதுவும் மலைப் பாறைகளாலும், அவை தம்மிலிருந்து சிதர்ந்த குண்டுக் கற்களாலும் நிறைந்திருக்கின்றது. இதன்கண் அடர்ந்து முளைத்திருக்கும் ஒரு வகை நாகதாளிகள், குதிரை களையும் குதிரைமேற் செல்லும் ஆடவரையும் தமக்குள் மறைத்து விடத்தக்க அத்துணை உயரமுள்ளன.

இனி, மேல் ஆத்திரேலியாவிலுள்ள பாலைவெளியின் இயல்பை இன்னும் எவரும் சென்று காணவில்லை. மற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/81&oldid=1584695" இலிருந்து மீள்விக்கப்பட்டது