உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் 18

8. சிறுவர்க்குரிய நாட்கடன்கள்

சிறுவர்கள் எல்லாரும் காலையில் கிழக்கே வெயில் வெளிச்சம் தோன்றும்போது உறக்கம் நீங்கி எழுதல் வேண்டும். தூக்கம் என்னும் இருளில் அறிவு இழந்து புதைந்து கிடந்த உயிர்களெல்லாம் அவ்விருளினின்றும் மீண்டெழுந்து அறிவு வெளிச்சம் பெறுதற்கு, அப்போது வெளியே தோன்றும் வெயில் வெளிச்சமே உதவியும் அடையாளமுமாய் இருக்கின்றது. ஆதலால், காலைப் பொழுதில் ஒரு நொடியும் வீண்போகாமல் அந்நேரத்தில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் பழக்கத்தைச் சிறுபருவத்திலேயே பழகிக் கொள்ளுதல் முதன்மையானது.

L

பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவர் சிலர் இரவின் பிற் பகுதியில் நான்கு மணிக்கெல்லாம் துயில் நீங்கி எழுந்து தம்முடைய பாடங்களை விடியும் மட்டும் ஓதி, அதன்பின் கதிரவன் தோன்றும் விடியற்காலையில் மறுபடியும் உறங்கு கின்றனர். மற்றும் சிலர் அங்ஙனம் உறங்காமல் தமக்குரிய முயற்சிகளைச் செய்யப் புகுகின்றனர். இவ்வாறு செய்வது பிசகு. கதிரவன் மேல்பால் மறைந்து மாலைக் காலத்தில் மட்டும் ஒன்பது மணி வரையில் இளஞ்சிறார்கள் தம்முடைய பாடங்களை ளக்கு வெளிச்சத்தில் ஓதலாமேயன்றி, இராக்காலத்தின் பிற்பகுதியில் உறக்கம் நீங்கி அங்ஙனம் ஓதுவது ஆகாது. ஏனென்றால் நூல் ஓதும் மாணாக்கர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் இரவின் பிற்பகுதியிலேதான் அயர்ந்த தூக்கம் நிகழ்கின்றது; அப்போதுதான் அவர்களுடைய மூளையானது இனிதாக ஆறுதலுற்றிருக்கின்றது. மக்கள் மட்டுமேயன்றி எல்லாச் சிற்றுயிர்களும் அந்நேரத்தில் இனிய துயிலில் அமர்ந்திருக்கின்றன. கதிரவன் எழுவதற்கு முற்பட்டதாகிய அவ்வைகறைப் பொழுதில் வீசுங் குளிர்ந்த மெல்லிய காற்றானது, அத்துயிலுக்கு இனியதாய், எல்லா உயிர்கட்கும் பெரியதோர் ஆறுதலைத் தருகின்றது. அவ்வளவு அமைதிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/83&oldid=1584697" இலிருந்து மீள்விக்கப்பட்டது