உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

ற்ற அந்நேரத்தில் கண் விழித்திருந்து

51

நூல் ஓதிய மாணாக்கர்க்குத் தலைவலியும் மயக்கமும் காய்ச்சலும் வயிற்றுளைச்சலும், அடுத்தடுத்து வருதலை யாம் பலகாற் கண்டிருக்கின்றோம். அதுவேயுமன்றிப், பாரிஸ் மாநகரத்தி மாணாக்கர்களை விடிய

லுள்ள ஆசிரியர்கள்,

தம்

இரண்டொரு மணிநேரத்திற்கு முன்னமே படுக்கையினின்றும் எழச் செய்து நூல் ஓதப் புரிந்து வந்த காலங்களிலெல்லாம், அவர்கள் பகற்பொழுது முழுவதும் தூக்கமயக்கம் உடைய ராயும் சுறுசுறுப்பு இல்லாதவராயும் இருந்தன ரென்றும், அங்ஙனம் செய்யாது விடியும் வரையில் அவர்கள் அயர்ந்து தூங்குமாறு விடுத்து, விடிந்தபின் அவர்கள் தாமாகவே எழுந்து தத்தம் கடமைகளைச் செய்யுமாறு ஒழுங்கு செய்தபிறகே அவர்கள் தெளிந்த அறிவும் சுறுசுறுப்பு முடையராய் ஒழுகின ரென்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, பகலவன் கிழக்கே தோன்றும் காலை ஆறு மணிக்கெல்லாம் சிறுவர்கள் தாமாகவே உறக்கம் நீங்கி எழுதலே நன்றென்று உணர்ந்து கொள்க.

அங்ஙனம் துயில் நீங்கி எழும்போதே ஒளி வடிவான கடவுளை நினைந்து வணங்குக. கடவுளை நினைந்து உருகிய பெரியோர்கள் அக்கடவுள்மேல் பாடிய இரண்டொரு பாடல்களை மெல்லிய இனிய குரலில் பாடி அவரை வணங்குதல் மிக நன்று. தன்னினும் சிறந்த தன்னைப் படைத்த ஆண்டவனது அருளொளியை இவ்வாறு காலையில் தன் அறிவு மலரும் காலத்திலேயே நன்றியுடன் நினைந்து குழையும் நெஞ்சுடைய ஒருவனுக்கு அந்நாள் முழுதும் அவன் அகத்தும் புறத்தும் அருள் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். அவனது அறிவு துலக்கமாய் இருக்கும். அவன் எந்த நன் முயற்சியிற் புகுந்தாலும் அது செவ்வனே நிறைவேறும். அவனைக் காண்பவர்கள் எல்லாரும் அவன் மீது அன்புடையராவர்.

இவ்வாறு கடவுளைத் தொழுதபின் குளிர்ந்த நீர் கொண்டு கண்களைக் கழுவித் துடைத்துவிட்டுக், கண்ணாடி யில் தன் முகத்தையும், அதன்பின் இரவிவன்மரையொத்த சிறந்த ஓவிய ஆசிரியர் வரைந்த அழகிய ஓவிய உருவங் களையும் உற்று நோக்கி மகிழ்க. உள்ளமானது வேறு று நினைவுகளால் கலக்குறாது தெளிவாய் இருக்கும் விடியற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/84&oldid=1584698" இலிருந்து மீள்விக்கப்பட்டது