உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

53

வைகளைத் தவிரப் பலராற் செய்து விற்கப்படும் பற் பாடிகளைப் பயன்படுத்துதல் நன்றன்று.

அதற்குமேல் மேல் வெந்நீரிலாயினும், தண்ணீரிலாயினும் நீராடுக.சீயக்காய்ப் பொடி கொண்டாவது, வெள்ளை ரோசாச் சவர்க்காரங் கொண்டாவது எண்ணெய்க் கசண்டையும், அழுக்கையும் கழுவிவிடுக. தலைக்கு நெய்ப்பானது ஏதுந் தேய்த்து முழுகல் வேண்டினால், எள்நெய், தேங்காய்நெய், வாதுமைநெய், ஆவின் நெய் முதலியவற்றுள் எது நலந் தருவதாகக் காணப்படுகின்றதோ அதனைப் பயன்படுத்திக் கொள்க. நெய்முழுக்குச் செய்யும்போது வெந்நீரில் முழுகுதலே மிகச் சிறந்தது. நெய் முழுக்கு ஆடிய நாட்களில் நீர்க் கோவையினை விளைவிக்கும் குளிர்ந்த உணவுப் பண்டங்களை விலக்கி விடுக; அங்ஙனமே அந்நாட்களில் மூளைக்கும் உடம்புக்கும் மிகுந்த உழைப்பினைத் தருதல், நூல் ஓதும் மாணாக்கர்க்கு ஆகாது.

நீராடியபின் தோய்த்துலர்ந்த தூய ஆடைகளையே உடுத்துக. முன்நாள் கட்டியிருந்த ஆடையைப் பின்நாளில் உடுத்தல் சிறிதும் ஆகாது. உடம்பிலிருந்து வெளிப்படும் பல்லாயிரக்கணக்கான நச்சுப் பூச்சிகளும், ஊரிலுள்ளார் உடம்புகளிலிருந்தும் தெருப்புழுதி சாக்கடைக் குப்பை களிலிருந்தும் வெளிப்படும் பல கோடிக்கணக்கான நச்சுப் புழுக்களும் முன்நாள் உடுத்த உடைகளில் ஒட்டியிருக்கு மாதலால், அவைகளை அறவே விலக்கித் தூயவைகளையே உடுத்துக.

6

இவ்வாறு நீராடி வந்த பின்பு இறைவனைத் தொழுது, காலை வேளையில் எளிதாகச் செரிக்கத்தக்க நொய்ய உணவு எஃது இசைந்ததோ அதனை உட்கொள்க. ஆனாலும் காப்பி தேயிலை கொக்கோ முதலிய பருகுநீரில் நோய்க்கு வித்தான புளிப்பு நஞ்சு உளது என்று அறிவில் சிறந்தோர் ஆராய்ந்து உரைத்தலால், அவைகளை முற்றுமே விலக்கி விடுதல் வேண்டும். அவற்றிற்கு மாறாகக் கொத்துமல்லி, நன்னாரிவேர், ஏலக்காய் என்னும் மூன்றும் கலந்து இடித்ததூளை நீரி லிட்டுக் காய்ச்சிக் காய்ச்சிய நீரை வடிகட்டி ஆவின்பாலும் பனங்கருப்பட்டியும் சேர்த்துப் பருகுக. இது மிகவும் குளிர்ச்சி செய்வதாகக் காணப்பட்டால் சுக்குத்தூளும், அவற்றோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/86&oldid=1584700" இலிருந்து மீள்விக்கப்பட்டது