உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

  • மறைமலையம் -18

கலந்து கொள்ளலாம். இங்ஙனம் செய்துகொள்ள இயலாத வர்கள் ஆவின்பால் சேர்த்த பச்சரிசிக் கஞ்சி குடிப்பது நன்று. அதுவும் செய்ய இயலாதவர்கள் பழையசோறு சிறிது உட் கொள்ளுதல் நன்று.

இவ்வளவும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத் திற்குள் செய்து முடித்துக் கொள்ளலாம். காலையில் ஆறுமணிக்குத் துயில் நீங்கி எழுந்த ஒரு சிறுவன் ஏழு அல்லது ஏழரை மணிக்குள் மேற்கூறிய காலைக் கடன்களை ஒழுங்காகச் செய்து முடித்துக் கொண்டு, அதன்பிறகு தன் பாடங்களை ஓதத் துவங்கல் வேண்டும். பாடம் ஓதும் போது தன் கருத்தை வேறொன்றிலும் செல்ல விடாமல், எந்தப் பாடத்தில் எந்தப் பொருள் சொல்லப்படுகின்றதோ அதில் தன் நினைவைப் பதித்தல் வேண்டும். நினைவைப் பல இடங்களில் சிதறவிட்டுக் கொண்டு, தவளை போல் எவ்வளவு கூவிப் பயின்றாலும், பாடப் பொருள் மனத்திற் பதியமாட்டாது. உரத்துக் கூவாமல் மெல்லிய குரலிலாவது, அன்றி வாய்திறவாமல் அமைதியா யிருந்தாவது பாடப்பொருளையும் சொல்லையும் பொருள் செவ்வையாகத் தெரிந்து கொண்டு பயிலுதல் முதன்மை யானது. இதற்கு அகராதியைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, சிறிதும் சோம்பாது, தெரியாத சொற்பொருள்களை அதன்கண் பார்த்துப்பார்த்துத் தெரிந்து கொள்க. அன்றாடம் பாடத்தில் வரும் அருஞ்சொற்பொருளையும், முதன்மையாக நினைவில் வைக்க வேண்டிய பகுதிகளையும், பாடச் சுருக்கங் களையும் ஒருகுறிப்பேட்டில் அவ்வப்போது குறித்து வைத்துக் காண்டு, அவைகளைப் பின் நாட்களில் திருப்பித் திருப்பிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வருக.

கணக்குப் போடுதல், தேசப்படம் வரைதல், ஓவியம் எழுதுதல் முதலான பயிற்சிகளைச் செய்தற்கு நேரம் மிகுதி யாய் வேண்டுமாதலால், முதலிலேயே இவைகளைத் துவங்கி விடாமல், விரைந்து படிக்கக் கூடிய பாடங்களை முதலில் எடுத்துப் பயின்று, அதன்பின் இவைகளைச் செய்து பழகுக. அவ்வாறின்றி, முதலில் கணக்குப் போடுதல் முதலான பயிற்சிகளைச் செய்து நேரத்தைக் கழித்து விடும் மாணாக்கர் கள் பின்னர் ஓதவேண்டிய பாடங்களுக்கு நேரம் இல்லாமை யால் அவற்றைப் பயிலாமலேயே பள்ளிக்கூடம் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/87&oldid=1584701" இலிருந்து மீள்விக்கப்பட்டது