உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

55

ஆ சிரியரால் ஒறுக்கப்படுவதுடன் ஆராய்ச்சியிலும் தவறி விடுகின்றனர். ஆதலால், முதலில் எளிதாகப் பயின்று கொள்ளத் தக்கவைகளையே தெரிந்து பயிலுதல் வேண்டும்.

இவ்வாறு ஒன்பது அல்லது ஒன்பதரை மணிவரையில் அன்றாடப் பாடங்களையும் பழம் பாடங்களையும் பயின்ற பின், நேரந்தவறாமல் பத்துமணிக்கெல்லாம் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குப் போய்த் தத்தம் வகுப்புகளில் தத்தம் ஆசிரியரை அன்புடன் வணங்கி அமைதியாயிருந்து, அவர் கற்பிப்பவை களை அவாவுடன் கேட்டு உள்ளத்தில் நன்கு பதித்தும், அவர் கேட்கும் வினாக்கட்குப் பொருத்தமான விடைகள் மொழிந்தும், தம்மோடு உடன்பயிலும் மாணாக்கருடன் அன்புடன் கேண்மை கொண்டும் ஒழுகுதல் வேண்டும்.

ங்

இக்காலத்தில் பெரும்பாலும் எல்லாப் பள்ளிக் கூட களும் காலை ஒன்பதரை அல்லது பத்து மணிக்குத் துவங்கு வதால், அவைகளிற்பயிலும் மாணாக்கர்களுக்கும், அம் மாணாக்கர்களைப் பயிற்றும் ஆசிரியர்களுக்கும் காலைக் கடன்களை முடித்து அன்றாடப் பாடங்களைப் பார்த்து உள்ளத்தில் அமைத்துக் கொண்டு வருவதற்கு நேரமும் வசதியும் இருக்கின்றன. ஆனால் சிலபல திண்ணைப் பள்ளிக்

கூட

ங்கள் மட்டும் காலை எட்டுமணிக்கெல்லாம் துவங்கு கின்றன. அப்பள்ளிக்கூடங்கட்குச் செல்லும் பிள்ளைகள் மிகச் சிறிய பருவத்தினராய் இருத்தலால், அவர்கள் மேற்கூறிய காலைக்கடன்களை எல்லாம் தெரிந்து செய்யக்கூடியவர் அல்லர் என்றாலும், அவர்தம் பெற்றோர்கள் அவர் செய்யக் கூடியவைகளை ஒழுங்காகச் செய்து பள்ளிக்கூடம் செல்லும் படி பழக்கி வருதல் முதன்மையானது.

இனிப் பகல் உணவு எடுப்பதற்கென்று கொடுக்கப்படும் ஒரு மணிநேர ஒழிவு நேரத்தில், சிறுவர்கள் உணவு கொண்ட பின், தம் தோழர்களுடன் இனிதாக விளையாடல் வேண்டும். ஒருவரையொருவர் பகைத்தலும் திட்டுதலும் அடித்தலும் கூடா. கெட்ட நடவடிக்கையுள்ள பிள்ளைகளுடன் நேசம் கொள்ளுதலும் ஆகாது; பகைத்தலும் ஆகாது. அவர்களுடன் நேசங்கொண்டால் அவர்களுடைய தீய இயற்கை உமக்கும் படிந்துவிடும்; அவர்களுக்கு வரும் துன்பம் உம்மையும் சாரும். அவர்களைப் பகைத்தாலோ, அவர்கள் உம்மைப் பழிப்பர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/88&oldid=1584702" இலிருந்து மீள்விக்கப்பட்டது