உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

  • மறைமலையம் -18

ஏசுவர், அடிப்பர், பிறரை ஏவியும் உமக்குத் தீங்கு செய்வர். ஆதலால், அவ்விருவகையிலும் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், அவரைக் காண நேரும்போதெல்லாம் இனிமை யாகச் சில சொற்களைப் பேசிவிட்டுப் போய்விடுக.

இனிப், பிற்பகல் முடிவில் பள்ளிக்கூடம்

வீட்டுக்குத் திரும்பும்போதும்

விட்டு

தம் தோழர்களுடன்

உடனே

அமைதியாகத் திரும்பல் வேண்டும். வீட்டுக்கு திரும்பாமல் மைதானங்களில் விளையாடுதற்கேனும், கடற்கரைகளில் உலவுவதற்கேனும் கடைத்தெருவுகளிற் பண்டங்கள் வாங்குவதற்கேனும், ஏரி குளம் கூவல் கால்வாய் ஆறுகளில் நீராடுதற்கேனும் செல்ல வேண்டியிருந்தால், அங்ஙனஞ் செல்வதைக் காலையிலேயே நும் பெற்றோர் களுக்குத் தெரிவித்து, அவர்கள் நும்மைத் தேடி அலைந்து துன்புறாமல் செய்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட இடங்களில் விளையாடுவதாயிருந்தாலும், மன மகிழ்வாய்ப் பொழுது போக்குவதாயிருந்தாலும், அல்லது நுமக்கு வேண்டுபவைகளை வாங்கிப் போவதாய் இருந்தாலும், உடம்பைப் பழுதுபடுத்திக் கொள்ளாமல் நோயை வருவித்துக் கொள்ளாமல் வண்டி, குதிரை, மாடு முதலியவற்றிற்கு டையே செல்லாமல், கடைகளில் பண்டங்களைக் களவு செய்யாமல் பொய்பேசாமல் நுமக்கும் நும் பெற்றோர்க்கும் தீங்கும் துன்பமும் உண்டாக் காமல் அறிவாய் நேர்மையாய் நடந்து கொள்க. மாலையில் இருண்டுபோன பின் வெளியிடங்களில் சிலகாலம் இருளில் போக நேர்ந்தால் கையில் விளக்கில்லாமற் போகலாகாது. இன்ன நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவோம் பெரியோர்களிடம் சொல்லி வந்தபடி, தவறாமல் அந்நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிவிடுதல் இளைஞர்களுக்குப் பெரும் கடமையாகும்.

என்று

இங்ஙனம் மாலையில் வீட்டிற்கு வந்த பின்னாவது அன்றி வருவதற்கு முன்னாவது வயிற்றிலுள்ள மலச்சக்கையைக் கழித்துவிடுதல் வேண்டும். பள்ளிக்கூடப் பிள்ளைகள் காலை மாலை இருபொழுதும் தவறாமல் மலச்சக்கை கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வார்களானால், அவர்கட்கு எத்தகைய நோயும் வராது. இக்காலத்து இளைஞர்கள் ஆண்டு முதிரா முன்னரே மூக்குக் கண்ணாடி இடுவது, மலச்சக்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/89&oldid=1584703" இலிருந்து மீள்விக்கப்பட்டது