உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

57

நீக்கி உடம்பைத் துப்புரவாக வைத்துக் கொள்ளாமை யினாலேதான். மலக்குடலில் அழுக்குச் சேரச் சேரக் கண்ணொளி மங்கும்; மூளை தெளிவாய் இராது. ஆதலால், மாணாக்கர் அனைவரும் தமது மலக்குடலை ல இரண்டு வேளையும் துப்புரவு செய்வதில் கருத்தாயிருக்க வேண்டும். அதில் கருத்தில்லாத பிள்ளைகளை அவர்தம் பெற்றோர்கள் கருதிப் பார்த்தல் கட்டாயமானது.

மாலையில் இல்லந்திரும்பிய பின் கட்டியிருந்த ஆடை களைக் களைந்துவிட்டுத் தூயன உடுத்து, இறைவனை வணங்கி நல்ல சிற்றுண்டி அருந்தி, ளைப்பாறி, ஒளி மிகுதியு முள்ளதொரு விளக்கு வெளிச்சத்தில் அதனொளி நேரே கண்ணுட்படாமல் ஒரு பச்சைக் காகிதத்தாற் சிறிது அதனை மறைத்து வைத்துக் கொண்டு பாடங்களை ஓதுதல் வேண்டும். சாய்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், குனிந்து கொண்டும் ஓதாமல் நேரிருந்து ஓதுக. ஒரேயிருப்பாயிருந்து ஓதாமல் முக்கால் மணிநேரத்திற்கு ஒருகாற் பாடத்தை விட்டெழுந்து, கண்களைக் குளிர்ந்த நீராற் கழுவி, ஐந்து நிமிஷம் உலவி, அதன்பின் ஓதுக. இவ்வாறு மாலையில் ஒன்பது அல்லது ஒன்பதரை மணி வரையிற் பாடங்களைச் செவ்வையாகப் பயின்று, அதன்பின் உணவுகொண்டு உலவி உறங்குக.

இங்ஙனமாகப் பகற் பொழுதையும் இரவின் முற் பொழுதையும் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டியிருக்கச், சிறுவர்களிற் பெரும்பாலார் முறைதவறி அப்பொழுதுகளை வீணே கழித்துவிட்டு, இரவில் வயிறுநிறைய உணவு காண்ட பின் கண்விழித்திருந்து பன்னிரண்டு ஒரு மணிவரையிலும், அல்லது விடியும் முன் நான்கு மணி யிலிருந்து காலை ஏழுமணி வரையிலும் நூல் ஓதுகின் றார்கள். இப்படிச் செய்பவர்கள் எல்லாரும் கண்ணோய் வயிற்றுநோய் மண்டைக் கிறுகிறுப்பு காய்ச்சல் இருமல் முதலிய நோய்களால் அடுத்தடுத்துத் துன்புறுத்தப்பட்டுக் கல்வியில் தேர்ச்சிபெறாது ஒழிதலுடன், மெலிந்து நரைத்து பழுத்து ஆண்டு முதிரா முன்னரேயும் மாண்டு போகின்றார்கள். ஆதலால், இரவில் வயிறு நிறைய உண்டபின் ஓதுதலும் ஆகாது. ஒன்பதரை மணிக்குமேல் உண்டபின் விழித்திருந்து பயிலுதலும் ஆகாதென்று கடைப்பிடிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/90&oldid=1584704" இலிருந்து மீள்விக்கப்பட்டது