உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் 18

9. ஆலமரமும் நாணலும்

ஓர் ஆற்றங்கரையில் ஓங்கி வளர்ந்து அடிபெருத்த ஓர் ஆலமரம் இருந்தது; அதன் அருகே சில நாணல் புற்களும் வளர்ந்திருந்தன. அவ்வாற்றில் வெள்ளம் பெருகியோடும் போது, அந்நீரோட்டத்தின் வழியே அந்நாணற் புற்களும் வளைந்து கொடுத்து, வெள்ளம் குறைந்த பின் முன்போல் நிமிர்ந்து நிற்கும். அங்ஙனமே பெருங்காற்று வீசும்போது அது வீசும் முகமாகவே அப்புற்கள் தலைவளைந்து கொடுத்துக் காற்றுத் தணிந்த பின் முன்போலவே தலைநிமிர்ந்து நிற்கும். இதனை அருகிருந்து கண்ட ஓர் ஆலமரமானது அந்நாணற் புல்லை நோக்கி ஏளனஞ்செய்து, “நீங்கள் ஏன் என்னைப் போல் தலைநிமிர்ந்து நில்லாமல் நீருக்கும் காற்றுக்கும் தலைவளைந்து கொடுக்கின்றீர்கள்?" என்று வினவியது. "ஐயா, உங்களைப் போல் எங்களுக்கு உடம்பில் வலிவில்லை; ஆகையால், தலைவளைந்து கொடுப்பதன்றி வேறு என் செய்ய வல்லோம்!” என்றன நாணற்புற்கள். அச்சொற்கேட்டு அவ்வால மரம் தன் வலிமையை வியந்து இறுமாந்து நின்றது. பின்னர் சிலநாளில் ரு பெரும் புயற்காற்று வீச, அவ்வாற்றில் வெள்ளமும் பெருகி வந்தது. அப்போது அவ்வாலமரம் வெள்ளத்தால் வேர்கள் மேலே கிளப்பப்பட்டும் கிளைகள் காற்றால் அலைக்கப்பட்டும் கீழே சாய்ந்து விழுந்தது. நாணற்புற்களோ அவையிரண்டுக்கும் தலைவளைந்து கொடுத்து, அவை ஓய்ந்தபின் என்றும்போல் தலைநிமிர்ந்து நின்றன.

ஆகவே, இறுமாப்புடையவர்கள் தமக்கு மேற்பட் வலிமையுடையவர்களால் தலைதாழ்த்தப்படுவார்கள் என் பதும், பணிவாய் நடப்பவர்கள் எல்லாராலும் பாராட்டப் பட்டு என்றும் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்பதும் இதுகொண்டு அறிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/91&oldid=1584705" இலிருந்து மீள்விக்கப்பட்டது