உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

59

10. ஒரு நாயின் அரிய செயல்

இவ்விந்திய நாட்டின்கண் உள்ள இரெயிப்பூருக்குப் பதினொரு கல் தொலைவில் ஒரு நாயினுக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உண்டு. அதனுள்ளே ஒரு நாயின் சிறுவடிவம் வைக்கப்பட்டிருக்கின்றது. அதனை அங்குள்ள அவ்வூரவர்கள் போற்றி வருகின்றனர். அக்கோயில் அமைக்கப்பட்ட வரலாறு இது:

கூவி விற்கும் வணிகன் ஒருவன் தனக்குக் கடன் கொடுத்த ஒருவனாற் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி ஒரு நாள் நெருக்கப்பட்டான். வணிகன் அப்போது தன் கையில் பொருள் இல்லாமையால் தன்னுடைய நாயையும் ஒரு பொன் கழுத்துப் பட்டிகையையும் அக்கடனுக்கு ஈடாக வைத்துவிட்டுப், பணங்கொண்டுவருவதாகத் தன் ஊருக்குப் போனான்.

பிறகு சிலநாட் சென்றன. ஒருநாள் இரவில் திருடர்கள் கடன் கொடுக்கும் அச்செட்டியாரது இல்லத்தினுள்ளே நுழைய, அது கண்ட நாய் அத்திருடர்களை நோக்கிக் குரைத்தது. திருடர்கள் அந்நாய்க்கு வேண்டிய இறைச்சி உணவினை அதன் முன்னே எறிந்தும், அஃது அவ்வுணவினை ஒரு பொருட் படுத்தாது மீண்டும் மீண்டும் குரைக்கலாயிற்று. இதற்குள் அத்திருடர் சிலர் அச்செட்டியாரது பணப்பெட்டியைத் திறந்து, அப்பொன்கழுத்துப் பட்டிகையையும் பிற நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓட முயன்றனர். ஆனால், அந்நாயோ அவர்களை ஓடவிடாமல் மறித்துக் குரைத்துப் பேரிரைச்சல் ட்டமையால், அவ்வீட்டவர்களும் அண்டை அயலாரும் விழித்து ஓடிவந்து அத்திருடர்களைப் பிடித்துக் கொண்டனர். அச்செட்டியாரும் தம்முடைய நகைகளை மீண்டும் பெற்றார். இதனால் மிகவும் களிப்படைந்த அச்செட்டியார் அந்நாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/92&oldid=1584706" இலிருந்து மீள்விக்கப்பட்டது