உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் -18

செய்த உதவியைப் பெரிதும் வியந்து, அந்நாயின் தலைவன் பட்ட கடனை விடுவித்து, அங்ஙனம் தாம் விடுவித்ததனை ஒரு துண்டுக் கடிதத்தில் வரைந்து, பின்னர் அக்கடிதத்தினை ஒரு சுருளாக்கி அதன் கழுத்திற்கட்டி, அந்நாயினையும் விடுதலை செய்தார்.

விடுபட்ட நாய் இரவெல்லாம் மகிழ்ந்தோடி வந்து விடியற்காலையில் தன் தலைவன் இருக்கும் இடத்தண்டை அடைந்தது. அதனைக் கண்ட அதன் தலைவன் “கடை கெட்டநாயே, நான் கொடுக்க வேண்டிய கடனை வந்து தீர்க்கு முன் நீ ஏன் இங்கு ஓடிவந்தாய்?” என்று சினந்து ஒரு தேங்காய் பருமன் உள்ள ஒரு கருங்கல் துண்டை எடுத்து அதன்மேல் உரமாய் வீசினான். அக்கல்லெறி பட்டதும் அந்நாய் சுருண்டு வீழ்ந்து அலறி இறந்தது.

அதன் பின் அத்தலைவன் அந்நாயின் கழுத்தில் ஒரு கடிதச் சுருள் கட்டியிருக்கக் கண்டு, அதனைப் பதைபதைப் புடன் அவிழ்த்துப் பார்க்க, அது தமக்குச் செய்த பேருதவியையும், அதனாற் கடனை விடுவித்து அந்நாயையும் விடுதலை செய்வித்த தமது மகிழ்ச்சியையும் அச்செட்டியார் எழுதியிருத்தல் நோக்கி, அவன் தன் நன்றியறிவுமிக்க நாயை ஆராயாமல் விரைந்து கொன்ற பிழையை நினைந்து நினைந்து ஆற்றாது நெஞ்சம் நெக்குருகலானான். பின்னர் அதன் நன்றியை நினைவுகூர்தற்கு அறிகுறியாகவே அதற் கொரு சிறுகோயிலும், கட்டிவைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/93&oldid=1584707" இலிருந்து மீள்விக்கப்பட்டது