உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் 19

இனித், திங்கள் இதழ், கிழமை இதழ், நாள் இதழ் நடத்துவோர் தம்முடைய இதழ்கட்குக் கட்டுரைகள் எழுதுந் தமிழ் அறிஞர்க்குத் தக்கபடி பொருளுதவி சய்தல் வேண்டுமே யல்லாமல்; அவர்களை வறிதே துன்புறுத்தி அவர்கள்பால் வேலைவாங்குவது நன்றாகாது.

தமிழ்கற்றவர்கட்கு எல்லாவகையிலும் பொருளுதவி செய்து அவர்களைச் சி ற க்கவைத்தால்தான் இந்நாடு முன்னேற்றம் அடையும். இவர்களைச் சிறக்க வையாமல், வேறு துறைகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இந் நாடு முன்னேற்றம் அடையாது. இதனை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும்.

மக்கட் கூட்டச் சீர்திருத்தம்

இ ப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்களிற் பெரும் பாலார் எல்லாம்வல்ல ஒருதெய்வத்தை வணங்காமல், இறந்துபோன மக்களின் ஆவிகளையும், பலபேய்களையும் வைபோன்ற வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி, அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய சயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படி செய்தல் வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள மக்கள் ஊன்தின்பவரும் ஊன் தின்னாத சைவரும் என்னும் ஒரு பெரும்பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன்தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல், பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச்சண்டை களை உண்டாக்குவதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறு பாடுகளை முற்றும் ஒழிப்பதற்கு எல்லாரும் பெருமுயற்சி செய்தல் வேண்டும்.

ஊன் தின்னும் வகுப்பினரிலும் அருளொழுக்க முடைய ராய்ச் சைவஉணவுகொண்டு சிவத்தையே வணங்கும் அன்பு மிகுந்து தூயராய் வருவாரைச் சைவராயிருப்பவர்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அவர்களோடு ஏதொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/131&oldid=1585723" இலிருந்து மீள்விக்கப்பட்டது