உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கோவை

99

வேறுபாடு மின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்தல் வேண்டும். கல்வியிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் அருளொழுக்கத்திலும் சிறந்தார்க்கே உயர்வு கொடுக்க வேண்டுமேயல்லாமல் வெறும் பிறப்புப் பற்றி இவ்வியல்புகள் இல்லார்க்கு உயர்வுகொடுத்தல் ஆகாது. என்றாலும், எவரையும் பகையாமல் அவரவர்க்கு வேண்டு முதவிசெய்து, எல்லாரோடும் அன்பினால் அளவளாவுதல் வேண்டும். சத்திரஞ் சாவடிகளிலும் சிறப்பு நாட்களிலும், பிறப்பால் உயர்ந்தவரென்று சொல்லிக் கொள்ளும் ஒருவகுப்பினர்க்கே உணவு கொடுத்தல் பொருள்கொடுத்தல் முதலிய அறங்களைக் குருட்டுத் தனமாய்ச் செய்கின்றார்கள். இதுவும் அறவே தொலைக்கப்படுதல் வேண்டும். உயர்வு தாழ்வு கருதாது அறஞ் செய்யத்தக்கார் எவரைக் காணிணும் அவர்க்கு அறஞ் செய்தலே தக்கது.

மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயாசிரியர்கள் பௌத்த சமணமதங்களில் இருந்து சைவ சமயம் தழுவ விரும்பினாரை அங்ஙனம் சைவ சமயத்திற் சேர்த்து அதனைப் பரவச் செய்திருக்கின்றார் களாதலால், நம் ஆசிரியர் காட்டிய அந் நன்முறையைக் கடைப்பிடித்து நாமும் அயற் சமயத்திலிருந்து வருவாரை நம்முடன் சேர்த்துக்கொண்டு எவ்வகை வேறு பாடுமின்றி அளவுளாவுதல் வேண்டும்.

இவர் தீண்டத்தக்கார் இவர் தீண்டத்தகாதவர் என்னும் போலி வேறுபாடுகளை அறவே ஒழித்துக் கோயில்களும் கல்விச் சாலைகளிலும் எல்லார்க்கும் ஒத்த உரிமை கொடுத்தல் வேண்டும். இதற்கு இன்றியமையாதனவான சைவ உணவு எடுத்தல், குளித்து முழுகித் துப்புரவாய் இருத்தல், நோய்க்கு இடங் கொடாமை முதலான நலம் பேணும் முறைகளை எல்லாரும் உணர்ந்து நடக்கும்படி அவற்றைத்துண்டுத்தாள்களிலும் விரிவுரைகளிலும் ஆங் காங்குப் பரவச்செய்தல் வேண்டும்.

கல்வியிலும் உடம்பு நலத்திலும் நல்லெழுக்கத்திலும் மேன்மேல் உயர்வதற்குப் பெருந்தடையாய் யாய் உள்ள சிறு பருவமணத்தை அறவே ஒழித்தல் வேண்டும். பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/132&oldid=1585724" இலிருந்து மீள்விக்கப்பட்டது