உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் 19

யினால் அடையத்தக்க பெரும் பயன்கள் என்று நம்மவர் நினைப்பார்களாயின், ஐயோ! அவர்கள் விலங்கினங்களினுங் கடைப்பட்டவர் ஆவார்கள் அல்லரோ?

ஆதலால், நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத் துணர்ச்சியை, நாம் பல வகையான உயர்ந்த வழிகளிலும் வளரச்செய்து அதனால் அழியாப் பெரும்பயன் அடைதல் வேண்டும். இதுவரையிலுமே, பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும், அடைந்து வரும் பயன்களும் அளவிடப் ப்படா. .நாவுக்கு இனிமையான பண் ங்களை நாளுக்குநாள் புதிது புதிதாகச் செய்யக் கற்று வருகின்றோம்; கண்ணுக்கு அழகாக உடுப்புகளையும் வகை வகையாகச் சய்வித்து அணிந்து வருகின்றோம்: பார்க்கப் பார்க்க கவர்ச்சியைத் தரும் ஓவியங்களை (சித்திரப்படங்களை) எழுதுவித்தும், பாவைகளைச் செய்வித்தும், அவற்றை நம்முடைய இல்லங்களில் வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து வருகின்றோம்; மேன்மாடங்களுள்ள மாளிகை வீடுகளையும், அவற்றைச் சூழப் பசிய தோட்டங்களையும் அமைப்பித்து, அவ்வீடுகளிற் களிப்புடன் குடியிருந்தும், அத்தோட்டங்களில் மனக்கிளர்ச்சியோடு உலவியும் வரு கின்றோம்; புல்லாங்குழல், யாழ், முழவு முதலான இசைக்கருவிகளின் இனிய ஒலிகளையும், அவற்றோடு சேர்ந்து பாடுவார் தம் இசைப்பாட்டுகளையுங் கேட்டுப் பெரு ங்களிப்பு அடைந்து வருகின்றோம்; நறுமணம் கமழ் பலவகை மலர்களைச் சூடியும் அம்மலர்களி லிருந்தும் சந்தனக் கட்டை அகிற்கட்டை முதலியவற்றிலிருந்தும் பெற்ற நெய்யையுங், குழம்பையும் பூசியும் இன்புறுகின்றோம். மிக மெல்லிய பஞ்சுகளாலும் பறவையின் தூவிகளாலும் அமைக்கப்பட்ட மெத்தைகளை வழுவழுப்பாகச் செய்வித்த தந்தக் கட்டில்களில் இடுவித்து, அவற்றின் மேற்படுத்து இனிது உறங்குகின்றோம். இன்னும், ஏவற்காரரால் வீசப் படும் வெட்டிவேர் விசிறிகளாலும், தாமே சுழலும் விசிறிப் பொறிகளாலும் வெயிற் கால வியர்வையினையும், புழுக்கத் தினையும், மாற்றி மகிழ்ச்சி அடைகின்றோம். திறமை மிக்க புலவர்களால் எழுதப்படும் புதிய புதிய கதைகளைப் பயின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/161&oldid=1585753" இலிருந்து மீள்விக்கப்பட்டது