உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

129

உள்ளங்களிக்கின்றோம். இங்ஙனமாக, நமக்குள்ள பகுத் துணர்ச்சியின் உதவியைக்கொண்டு நாளுக்கு நாள் அடைந்துவரும் இன்பங்களை முற்ற எடுத்து முடித்துரைக்கப் புகுந்தால் அவற்றிற்கு இவ் ஏடு இடங் கொள்ளாது.

மேலும், நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்குத் தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்து வருவதுடன், பகுத்துணர்ச்சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த அறிவுடையோர்களாற் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால் நாம் எல்லையில்லாத டர்க் கடலினின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் புதுப் புது நலங்களை அடைந்து இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம். நீராவி வண்டிகள் ஏற்படாத அறுபது எழுபது ஆண்டு களுக்குமுன் நம்முன்னோர்கள் ஓர் ஊரிலிருந்து தொலைவி லுள்ள மற்றோர் ஊருக்குச் செல்ல நேர்ந்தால், அப்போது அவர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள்! அக்காலங்களிற் செவ்வையான L பாட்டைகள் கிடை யா. இருந்த சில பாட்டைகளோ, கல்லும் கரடும் மேடும் பள்ளமும் நிரம்பிக் கால் நடையாய்ச் செல்வார்க்கும், மாட்டு வண்டிகளிற் செல்வார்க்கும் மிகுந்த வருத்தத்தையுங், காலக்கழிவினையும் , பணச்செலவினையும் உண்டாக்கின. அப்பாட்டைகள், காடுகளின் ஊடும், மலைகளின் மேலும், பாலங்கள் இல்லா ஆறுகளின் நடுவுங் கிடந்தமையால், அவற்றின் வழிச் செல்வோர்கள், புலி, கரடி, ஓநாய், பாம்பு முதலான விலங்குகளாலும், கள்வர்களாலும் அலைக்கப்பட்டுப் பொருளும் உயிரும் இழந்தும், பொருள் இழந்து அரிதாய் உயிர் தப்பியும் துன்புற்றார்கள்; வழியிடையே உள்ள ஆறுகளில் வெள்ளங்கள் வந்துவிட்டால், ஓடம்விடுவார் ல்லாதபோது, அக்கரையில் வந்து சேர்ந்தோர் அங்கேயும். இக்கரையிற் போய்ச்சேர்ந்தார். இங்கேயுமாக, வெள்ளம் வடியும் நாட்கள் வரையிற் கவலையோடு காத்திருந்தார்கள். கடலாற் சூழப்படாத நாடுகளில் இருப்பவர்களே இங்ஙனம் ஓர் ஊருக்குச் செல்ல இத்தனைத் துன்பங்களை அடைந் தார்களென்றால், கடல் சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்

காடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/162&oldid=1585754" இலிருந்து மீள்விக்கப்பட்டது