உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் 19

களும், பெருங் கடல்களுக்கும் அப்பால் உள்ள கடாரம் (பர்மா), சாவகம் (ஜாவா), சீனம், பாதளம் (அமெரிக்கா) முதலான நாடுகளில் இருந்த மாந்தர்கள் இப்பரத நாட்டுக்கு ( இந்தியாவுக்கு) வரவும், இங்குள்ள மாந்தர்கள் அவ் அயல் நாடுகளுக்குச் செல்லவும் எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும்!

அக்கொடிய துன்பங்களுக்கு அஞ்சியே, முற்காலத் திருந்த முன்னோர்களிற் பெரும்பாலார் ஓர் ஊரிலிருந்து தாலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச்செல்வதில்லை; முழு வறுமையாற் பசித்துன்பந் தாங்க மாட்டாதவர்களே தாம் இருந்த ஊரை விட்டு வேறு வளஞ்சிறந்த ஊர்களைத் தேடிச் சென்றனர். மற்றையோர் தாந்தாம் இருந்த இடங் களிலேயே தத்தமக்கு வேண்டிய உணவுப் பண்டங்களைப் பயிர் செய்துகொண்டு பெரும்பாலும் வறுமையிலேயே

காலங்கழித்தனர்.

அக்காலத்தில் ஓர் ஊரில் உண்

ாக்கப்பட்ட பண்டங்கள், பிறிதொரு சிறிய ஊருக்குச் செல்வதில்லை. காவிரிப்பூம்பட்டினம், உறையூர், மதுரை, கரூர் முதலான பெரிய தலைநகர்கள் சிற்சிலவற்றிற்கே அயலூர்களில் ஆக்கின பண்டங்கள் விலைப்படுத்த வரும், நிரம்பப் பாடு பட்டு அப்பண்டங்களை அந்நகரங்களிற் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க வேண்டியிருத்தலால், வணிகர்கள் அவைகளை மிகுந்த விலைக்கு விற்றனர். கடல் தாண்டியுள்ள நாடுகளில் ஆக்கின அரும் பண்டங்கள் கப்பல்களின் வழியாக வர வேண்டியிருந்தமையாலும், அக்காலத்துப் பாய்கட்டிக் கப்பல்கள் கடலிலுள்ள கடலிலுள்ள சுழல்களுக்கும் அங்கே வீசும் சூறைக்காற்றுகளுக்குந் தப்பிப் பிழைத்துச்சென்று அயல் நாடுகளிற் கிடைத்த அவ் அரும் பண்டங்களை ஏற்றிக் காண்டு திரும்பி இங்கு வந்து சேரப் பல திங்களும், பல ஆண்டுகளும் கடந்து போனமையாலும் அவ் அரு பண்டங்களை மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய் தார்கள். அதனால், மிகச் சிறந்த செல்வர்களாய் உள்ள வர்களே அவ்உயர்ந்த பண்டங்களை வாங்கத் தக்கவராய் இருந்தார்கள். மற்றவர்களெல்லாரும் அவைகளை வாங்கு தற்கு ஏலாமல் அவற்றைப் பார்த்துப் பார்த்து ஏமாந்தனர்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/163&oldid=1585755" இலிருந்து மீள்விக்கப்பட்டது