உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் 19

நினைவில் இருத்திக் கொள்க. இங்ஙனந் தமிழர்மேல் வைத்த நச்சுப் பகைமை காரணமாகவே, தெற்கே நாகரிகமுடையரா யிருந்து இறந்துபட்ட தமிழர்தம் மூதாதைகளுக்குரிய தென்றிசையை, உயிரைக் கொள்கை கொள்ளுங் கூற்றுவ னுலகாகவும் அவர்தம் பிதுரருறையும் அவ் வுலகை நரகவுலகாகவுஞ் சதபத பிராமணகாலத் தாரியர் எழுதி வைத்தனர். அவர் இத்துணை இழிவு படுத்தி எழுதி வைத்ததனை ஆராய்ந்து பார்க்கமாட்டாத இஞ்ஞான்றைத் தமிழர்களும் பிதுரருலகுதென்றிசைக்கண் உளதென்னும் அவருரையைத் தழுவி, அதற்கியைய ஒழுகலாயினர் கண்டீர்! இங்ஙனந் தென்றிசைக்கண் உறைவார் 'பிதுரர்' என்று கூறிய ஆ ரியர்க்கு, அவரை அயன்படைப்பான தேவர் என்று மாற்றிச் சொல்வதற்கு மனம் ஒருப்படுமோ? ஒருப்படா தன்றே; ஆனதனாற்றான், சதபத பிராமணத்தின்கண் யாண்டும் ‘பிதுரர்' தேவர் குழுவிற் சேர்த்துச் சொல்லப் படாமல், தேவர்களுறையும் வடதிசைக்கு எதிரான தென் றிசைக்கட் கூற்றுவனுலகில் உறைபவராகச் சொல்லப் பட்டன ரென்க. ஆகவே, பரிமேலழகியார் உரைத்தவுரை ஆரியவேத நூலுக்கும், அதற்குரையாயெழுந்த சதபத பிராமணத்திற்கும் முற்றும் மாறாதல் கண்டு கொள்க.

அற்றேற், பரிமேலழகியார் ‘பிதுரரை’ அயன் படை ப் பான கடவுட்சாதி யென்றது எங்கிருந் தெடுத்த தெனிற் கூறுதும், வடமொழியில் இஞ்ஞான்று காணப்படும் புராணங்களிற் பெரும்பாலன, தென்னாட்டின் கண் உள்ள சைவர் வைணவர்களால் ஆக்கப்பட்டனவாகும். இச் சைவ வைணவரிற் பெரும்பாலார் பண்டைத் தமிழரின் வழி வந்தவரே யல்லாமல் ஆரியரின் வழிவந்த வரல்லர். என்றாலும், ஆரியர் இந்நாட்டிற் குடிபுகுந்து இங்குள்ள அரசர்களையுஞ் செல்வர்களையுந் தம் வயப்படுத்தித் தம் முடைய ஆட்சியையும் முதன்மையையும் நாட்டவே, அவ ருடைய சிறு தெய்வவணக்க வெளியாட்டு வேள்விகட்குச் சிறிதும் உடம்படாத சைவ வைணவர், ஆரியக் கோட் பாட்டை மறுத்துத் தாம் வணங்கிப் போந்த சிவபிரான் வழிபாட்டையுந் திருமால் வழிபாட்டையும் நிலைநிறுத்து தற்கு, ஆரியர் கொணர்ந்த வட மொழியையே கருவியாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/193&oldid=1585789" இலிருந்து மீள்விக்கப்பட்டது