உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

  • உரைமணிக்கோவை :

161

கொண்டு புராணங்களும் ஆகமங்களும் இயற்றினார். இங்குவந்த ஆரியர் தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றுந், தாம் வழங்கிய மொழியைத் தேவமொழி யென்றுஞ் சொல்லி இங்குள்ள அரசர்களையும் பிறரையும் நம்பச் செய்து, இங்கு எவர்க்குமில்லாத ஒரு பெருஞ் சிறப்பையும் ஒரு பெரும் பாராட்டையுந் தமக்கு உண்டாக்கிக் கொண்டமையினாலே, அவர்களுடைய கோட்பாடுகளை மறுத்துத் தம்முடைய கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டிய இன்றியமை யாமையினையும், அங்ஙனஞ் செய்வது தமிழிலன்றி அவர் சிறந்தெடுத்துப் பாராட்டவைத்த தேவமொழி யென்னும் வடமொழியின்கட் செய்ய வேண்டிய இன்றியமையாமை யினையும், அங்ஙனம் அதன்கட் செய்வதூஉம் மக்களாகிய தம் பெயராற் செய்யப்படின் ஆரியராலும் அவர் வயப் பட்டாராலுங் கைக்கொள்ளப்படா தாகலின் தம் பெயரை மறைத்துக் கடவுட் பெயரால் அமைக்கவேண்டும் இன்றி யமையாமையினையும் நன்குணர்ந்த சைவவைணவர் தத்தந் தெய்வங்களே அப் புராணங்களையும் ஆகமங்களையும் வடமொழியில் ஆக்கலாயின வென அவற்றில் வரைந்து வைத்தனர்.

.

இவ் வடமொழி நூல்களெல்லாந் தமிழ்நாட்டிலுள்ள வர்களாலே இற்றைக்குத் தொள்ளாயிர ஆண்டுகளுக்கு முன்னேதொட்டு நெடுக ஆக்கப்பட்டு வந்தமைக்குச் சான்றுகளும் அந்நூல்களின் பிற வரலாறுகளும் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூலில் விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு புராணங் களும் ஆகமங்களும் வடமொழியில் எழுதப்பட்ட பிற் காலத்திலேதான் தென்புலத்து மூதாதையரான பிதுரர்களுந் தேவர்களாக உயர்த்தி நம் தமிழர்களால் எழுதிவைக்கப் பட்டார்கள். ஆரியர்கள் தமிழரை அசுரர்களென்றும், அவருறையுந் தென்றிசையைக் கூற்றுவனுலகென்றும், அதன்கண் இருந்து இறந்து பட்ட மூதாதையரை அக் கூற்றுவலனுலகு சென்று வைகும் பிதுரரென்றும் இழித்துக் கூறினராகலின் அவ் இழிபை மாற்றவே, புராண ஆகமங்க ளெழுதிய தமிழ்க்குருக்கண்மார் அவரை அயன் படைப்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/194&oldid=1585791" இலிருந்து மீள்விக்கப்பட்டது