உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் 19

கடவுட்சாதி யென்று அந்நூல்களில் வரைந்து வைத்தா ராகல் வேண்டும். அதனைத் தழுவியே பரிமேலழகியாரும் அவரைக் கடவுட்சாதி யென்று எழுதி விட்டா ரென்க.

து

முற்செய்த நூல் இது பிற்செய்த நூல் இதுவென்று வரலாற்று முறையில் நின்று ஆராய்ந்து பாராமையி னாலேயே தமிழ் ஆரியம் முதலான மொழிகளை நன்கு கற்றவர்களும் நூல்களின் உண்மையும் நூலாசிரியர் கருத்தும் உணராராய்ப் பழையவற்றைப் புதியவாகவும் புதியவற்றைப் பழையவாகவும் மயங்கக்கொண்டு, உண்மையைப் பொய்யா கவும் பொய்யை உண்மையாகவும் நம்பிப் பெரிதும் பிழை படுகின்றார். அதுவேயுமன்றி, ஆரியமொழி நூல்களில் எஃது எங்ஙனம் எழுதப்பட்டிருந்தாலும் அதனை அங்ஙனமே நம்பி அறியாமையில் அமிழ்ந்திக் கிடப்பதும் நம்மனோர்க்குள் வேரூன்றிய வழக்கமாய் விட்டது. அதுவல்லாமலும், ஆரியர் தமிழர்க்குச் செய்து போந்த தீமைகளை எடுத்துச் சொல்லி, இனித் தமிழர் அத் தீமைகளினின்றும் விலகி முன்னேற்ற மடைதற்குரிய வழி வகைகளைக் காட்டினால், அதனையுங் குற்றமாகச் சொல்வார் தந்நலம் பாராட்டுந் தமிழரிற் பலர் உளராகலின், அவராலும் ஆராய்ச்சியறிவு தடைப்படு கின்றது. என்றாலுந், தென்புலத்தில் மிக்க நாகரிகமுடையரா யிருந்து காலஞ்சென்ற தம் மூதாதையர் அனைவரையும் ஒருங்கு சேர்த்து நினைந்து, அவர்க்கு மேன்மேல் நலம் அருள்கவென்று எல்லாம்வல்ல இறைவனை C வண் நன்றிக்கடன் செலுத்துவதே. அம் மூதாதையர் வழிவந்த தமிழ் மக்களாகிய நமக்கு உரியதாமென்பதூஉம், அதனையே பண்டைத் தமிழ்ச் சான்றோராகிய நெட்டிமையாரு அவர்வழி பிழையாது வந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவ னாரும் அருளிய செந்தமிழ்ப் பாட்டுகள் அறிவுறுத்து கின்றன வென்பதூஉம், நம் தமிழ்மக்கட் குரித்தல்லாத பிதுரர் வழிபாட்டைத் 'தென்புலத்தார் தெய்வம்' என்னுந் திருக் குறளுக்கு ஏற்றிச் சொல்லிய பரிமேலழகியாருரை கொள்ளற் பால தன்றென்பதூஉம் இவ்வாராய்ச்சிக் கட்டுரையின்கண் எடுத்துக் காட்டி நம் மக்களை மெய்ந்நெறியில் உய்த்தல் இன்றியமையாததாதல் காண்க.

டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/195&oldid=1585792" இலிருந்து மீள்விக்கப்பட்டது