உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

4. தனித் தமிழும் கலப்புத் தமிழும்

ஆகவே, நிலையான நிலையான

மக்கட் கூட்டத்தாரின் நாகரிகமெல்லாம், அவர் வழங்கும் மொழியினால் நன்றாயறியப்படும். நாகரிக மில்லாத மக்களின் மொழியானது நாளுக்கு நாள் உரு மாறியும், மற்ற மொழிச் சொற்களொடு கலந்துங் கடைசியில் தானொரு மொழியென்றே நில்லாமல் மாய்ந்து போகின்றது. இதற்குச் சான்றாக உலகமெங்குமுள்ள காட்டு மிராண்டி களின் மொழிகள் காலந்தோறும் மாறி மாறி மாய்ந்து போதலை வெள்ளைக்கார அறிஞர்கள் எடுத்துக் காட்டி யிருக்கின்றார்கள். நாகரிகமும், நிலையான வாழ்க்கையும், நாளுக்கு நாள் பெருகும் அறிவு விளக்கமும், அரிய முயற்சியும் உடைய மக்களிடத்தல்லாமல், ,மற்றவர்பால் ஒரு மொழி சிறந்து தூயதாய்த் தொடர்பாய் நடைபெறாதென்பது அறிவுடையார்க்கெல்லாம் உடன் பாடாகும். ஆதலால், நாகரிக முடைய மக்கள் தமது மொழியை நன்கு பாதுகாத்து வளர்த்தலிற் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டுமென்பது சொல்லாமலே நன்கு விளங்கும். மக்களின் முயற்சியால் ஒரு மொழியானது உரம் பெற்று உயிர்ப் புடையதாய் வழங்குதல் போலவே, திருந்திய மொழி வழக்கினாலும், அம்மக்கள் உரம்பெற்று உயிர்ப்புடன் நடைபெறுவர். வலிமையிற் சிறந்த ஒருவனையும், அறிவில் மிக்க மற்றொருவனையும், நல்லியற்கை வாய்ந்த வேறொரு வனையும், அவனவன் சொற்களினாலேயே நாம் அறிந்து கொள்ளலாம். அங்ஙனமே வலிமை யில்லாத ஒருவனையும், அறிவு குறைந்த மற்றொருவனையும், தீயோனான வேறொரு வனையும் அவனவன் சொற்களினாலேயே அறிந்து கொள்ளலாம். ஆகவே, ஒரு மொழி வழக்கிற்கு அம் மொழிக்குரிய மக்கள் இன்றியமையாதவராயிருத்தல் போலவே, நாகரீக வாழ்க்கைக்கும் அவர் தம் மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/196&oldid=1585793" இலிருந்து மீள்விக்கப்பட்டது