உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் 19

இன்றியமையாதாகுமென்பது பெறப்படும். மக்களை விட்டு மாழியும், மொழியை விட்டு மக்களும் உயிர் வாழ்தல் சிறிதும் இயலாது. “எனது விருப்பப்படிதான் யான் பேசும் மொழியைத் திரித்தும், அயல் மொழிச் சொற்களோடு கலந்து மாசு படுத்தியும் வழங்குவேன்; அம் மொழியின் அமைப்பின்படி யான் நடக்கக் கடவேனல்லேன் என்று ஒவ்வொருவனுந் தனது மொழியைத் தன் விருப்பப்படி யெல்லாந் திரித்துக் கொண்டு போவனாயின், சிறிது காலத்தில் ஒரு மக்கட் கூட்டத்தாரிலேயே ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முடியாத வகையாய் ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும் ஒவ் வாரு புதுமொழி காலந்தோறும் உண்டாகி அம் மக்களை ஒன்று சேரவிடாமல் அவர்களைப் பல சிறு கூட்டங்களாகப் பிரித்து விடும்.

முன்னொரு காலத்தில் இவ்விந்திய நாடெங்கும் பரவி யிருந்த தமிழும், தமிழ் மக்களும் இப்போது எத்தகைய நிலையிலிருக்கின்றனர் என்பதை நினைத்துப் பாருங்கள்! முற்காலத்தில் தமிழ்மொழி ஒன்றையே பேசிய தமிழ் மக்களின் தொகை ஆறு கோடியாகும். அப்பெருந் தொகை யான மக்கள் ப்போது சிறு சிறு கூட்டத்தவராய்த் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவு, தோடம், படகம், தோடம்,படகம், குடகம், உராவோன், எர்க்கலா, ஏனாதி, பிராகுயி, கோண்டம், பில்லம் முதலான பல்வேறு மொழிகளைப் பேசுவாராய், ஒருவர் பேசுவதை ஒருவர் அறியாமல் விழிக்கும் நிலையில் இருப்பது எதனாலென்பதையும் நினைத்துப் பாருங்கள்! நாகரிகத்தாற் சிறந்த தமிழ், முன்னோர்கள் வழங்கிய செந்தமிழ் வழக்கிற்குச் சிறிதுங் கட்டுப்படாமல் தாந்தாம் விரும்பியபடியே தமிழ்ச் சொற்களைத் திரிபு படுத்தியும், வட சொற்களை ஏராளமாகக் கலந்து மாசு படுத்தியும் வந்த தமிழ்மக்களன்றோ இப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலான பலவே மொழிகளைப்பேசும் பலவேறு இனத்தவர்களாய் ஒருவரை ஒருவர் அறியாமலும், ஒருவரோடொருவர் அளவளாவுதற் கில்லாமலும், ஆங்காங்குத் தன்னந் தனியராய்ச் சிறு சிறு கூட்டத்தவராய் ஆரியர்களுக்கு அடிமைகளாய் வாழ்நாட் கழிக்கின்றனர். ஆதலால், ஒரு மக்கட் கூட்டத்தார் தம்முட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/197&oldid=1585795" இலிருந்து மீள்விக்கப்பட்டது