உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

165

பலவகையாய்ப் பிளவு படாமல் ஒன்றுபட்டிருந்து நன்கு உயிர்வாழ்வதற்கு அவர்கள் தமக்குரிய மொழியைத் திரிபு படுத்தாமலும், அதில் அயல் மொழிச் சொற்களைக் கலவா மலும் மிகவும் கருத்தாக அதனைப் பாதுகாக்க வேண்டு மென்பது புலனாகும்.

இனி, ஆங்கில மொழியை எடுத்துக்காட்டி, அதிற் பலவேறு மொழிகள் கலந்திருப்பதே அதனுடைய வளர்ச் சிக்கும் பரவுதலுக்குங் காரணம் என்பர் சிலர். ஆனால், ஆங்கில மொழியின் வரலாற்றை அவர்கள் செவ்வையாக அறிந்துதான் பேசுகின்றார்களோ என்பது எனக்கு ஐயமா யிருக்கின்றது. ஆங்கிலமானது சொல் வளமில்லாத ஏழை மொழி;

ாழி பழைய நாளில் நாகரிக மில்லாத ஒரு சிறு கூட்டத்தவராற்பேசப்பட்ட மொழி; காலங்கடோறும் பிற நாடுகளிலிருந்து வந்த முரடர்களான வேறு வேறு மக்களால் அலைப்புண்டு. அவர்கள் கொண்டு வந்த பல்வேறு மொழி களாற் கலப்புண்டு தன் தூய்மை யிழந்தமொழி; காலங்க டோறும் மாறிக் கொண்டு வந்த மொழி. இதனைப் பேசும் மக்கள் அறிவிலும், முயற்சியிலும் மேம்பட்டு நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்து வழங்கிய பின்னரே, தமது மொழியை இனித் திரிந்து போக விட்டால் தமது வாழ்க்கை நிலையாது என நன்குணர்ந்து, அதற்கு இலக்கண இலக்கிய வரம்பு கோலி அதனைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வருகின் றார்கள்.

ஐந்

ஆசிரியர் 'பெயின்' 'மிக்கிள் ஜான்’ முதலான வர்கள், தமது ஆங்கில மொழியைத் தூயதாகப் பிறமொழிச் சொற்கள் கலவாமல் எவ்வளவு அதனைப் பாதுகாத்து வழங்கக் கூடுமோ, அவ்வளவுஞ் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி எழுதியிருக்கின்றார்கள். இன்றைக்கு நூறாண்டு கட்கு முன்னிருந்த ஆங்கில மொழியும், இன்றைக்கு முந்நூறாண்டுகட்கு முன்னிருந்த ஆங்கில மொழியும் வெவ்வேறு மொழிகள் போல் மாறிவிட்டமை யால், அக் காலத்தில் எழுதப்பட்ட நூல்களை இப்போது ஆங்கிலம் பயிலுகின்றவர்கள் தெரிந்து கொள்ள முடியாத வர்களாயிருக்கின்றார்கள். ‘சாசர்’ எழுதிய நூல்களையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/198&oldid=1585796" இலிருந்து மீள்விக்கப்பட்டது