உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

5. இந்திமொழிப் பயிற்சி ஏற்படைத்தாகுமா?

இவ்விந்திய நாட்டின் வடக்கே பல ஊர்களிற் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் 'ஹிந்தி' மொழியை, இவ் விந்திய நாடு முழுதுமுள்ள மக்கள் எல்லாரும் பயின்று அதனையே பொது மொழியாக வழங்கிவரல் வேண்டு மென்று, இந்நாட்டின் நன்மைக்காக உழைக்கும் வடநாட்டு அறிஞர் பலருந் தென்னாட்டறிஞர் சிலரும் பேசியும் எழுதியும் வருவதுடன் ஆங்காங்கு இந்திமொழிப் பள்ளிக் கூடங்களுந் திறப்பித்து நடத்தி வருகின்றார்கள். ஆகையால் இந்திமொழி நம் நாட்டவர்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா என்பதனை முதற்கண்

ஆராய்வாம்.

இப்போது, ஆங்கிலக் கல்விக் கழங்களிற் கல்வி பயின்று வெளிவரும் நம் இந்திய மக்களிற் பெரும்பாலார் பொருள் வருவாய்க்கு வேண்டுமளவு சிறிது ஆங்கிலம் பயின்றவ ராயும், அதனோடு சேர்த்துச் சிறிதே கற்பிக்கப்பட்ட தமிழ் முதலான மொழிகளைத் தப்புந்தவறுமாய்ப் பேசஎழுதத் தெரிந்தவராயும் வெறும் போலிவாழ்க்கையிற் சில்லாண்டு களே உயிர்வாழ்ந் தொழிதலால், இந்நாட்டின்கட் பெருந் தொகையினராய் வெற்றுயிர் வாழ்க்கை செலுத்துங் கல்லா மாந்தர்க்குந், தமிழ் முதலான நாட்டு மொழிகளை வருந்திக் கற்றும் வறியராய்க் கார்த்திகைப் பிறைபோல் ஆங்காங்குச் சிதறிச் சிற்சிலராய்க் காலங்கழிக்குந் தாய்மொழி கற்ற மாந்தர்க்கும் ஆங்கிலங் கற்றவரால் மிகுதியான பயன் ஏதும் விளைகின்றிலது. இப்படியிருக்க, இத் தமிழ் நாட்டிலும், பிறமொழி பேசும் பிறநாடுகளிலும் அயல் மொழியான இந்திமொழிப் பயிற்சியை நுழைத்தால் அதனாற் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/212&oldid=1585815" இலிருந்து மீள்விக்கப்பட்டது