உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் 19

விளையுமோ என்பதனை அறிஞர்கள் ஆழ்ந்தாராய்ந்து பார்த்தல் வேண்டும்.

ஒருங்குகூடிப்

இவ்விந்திய தேயத்தின் பற்பல நாடுகளிலும் உயிர் வாழும் மாந்தர்கள் பற்பல மொழிகளைப் பேசுவாராய் இருத்தலின், இந்நாட்டவரெல்லாரும் ஒரு பொது நன்மையின் பொருட்டு பேசவேண்டிய காலங்களில் இந்தியை அவரெல்லாரும் பொதுமொழியாய்க் கையாளுதலே நன்று என்று தேயத்தொண்டர் சிலர் கூறுகின்றனர். இவரது கூற்றுப் பொருந்தா தென்பது காட்டுவாம்.

இந்தி மொழியானது வடக்கே பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதே யல்லாமல், அஃதெங்கும் ஒரே வகையாகப் பேசப்படவில்லை. இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்திமொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை “மேல்நாட்டு இந்தி’, கீழ்நாட்டு இந்தி 'பிகாரி' என்னும் மூன்று பெரும் பிரிவு களாகவும், அப்பெரும் பிரிவுகளினுள்ளே முறையே ‘பாங்காரு', பிரஜ்பாஷா, 'கனோஜ்',‘பத்தேலி', உருது; ‘அவதி’, ‘பகேலி', ‘சத்தீஸ்வரி’, ‘மைதிலி’, போஜ்புரி', 'மககி’என்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத்திருக்கின்றனர். இன்னும் இந்தி மொழி யின் பிரிவுகளாகப் பேசப்படுஞ் சிறு சிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்தி மொழியின் பலபிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல நாடுகளில் உள்ளாரும் ஒரு நாட்டவர்மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர்வாழ்ந்து வருதலின், இந்தி அவரெல் லார்க்கும் தெரிந்த பொது மொழி எற்றுரைப்பாருரை எங்ஙனம் பொருந்தும்? இங்ஙனம் பற்பல நாடுகளில் பற்பல மாறுதல்களுடன் வழங்கும் பல்வேறு இந்தி மொழிகளில் எதனை இத் தென்னாட்டவர் கற்றுத் தேர்வது? எதனை இவர் கற்றாலும் ரெல்லாரோடும் பேசுதல் இயலுமா? இயலாதே. மேற்குறித்த இந்தி மொழிகளே யன்றிச், 'சிந்தி’, 'லந்தி', 'பஞ்சாபி', குஜராத்தி’, ‘ராஜபுதானி”, 'குமோனி', ‘கடுவாலி', ‘நேபாலி', உரியா', ‘பங்காளி”, “மராட்டி’, 'சிணா', காஸ்மீரி' 'கோகிஸ்தானி', 'சித்ராலி’, ‘திராகி’, ‘பஷை’, ‘கலாஷா’,

அதனுதவிகொண்டு இவர் வடநாட்டவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/213&oldid=1585817" இலிருந்து மீள்விக்கப்பட்டது