உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் 19

கொங்கைப் பொறைகெழு கொழுந்தமிழ் மங்கை யானா வேட்கையினாடி மேனாட்

கீர னாவிற் சீரிதி னமர்ந்தனள்

கவின்கெழு திருமகள் நறும்பொதி யவிழ்க்குங் கொழுந்தா மரையின் மேவி

யெழுந்தினி திருந்த வியல்பினா லெனவே.

இத்துணைப் பெருஞ்சிறப்பும் ஒருங்கு வாய்ப்பப் பெற்றுக் கடைச்சங்கத்துத் தலைமைப் புலமைத்திற மேற்கொண்டு பொலிந்த ஆசிரியர் நக்கீரனார் பெருமை ஒருநாவுடைய வொருவரால் எடுத்தொரு துறைப்படுத் துரைக்கப்படும் நீரதன்று. ஆயினும், பிற்காலத்தாரிற் சிலர் இவ்வாசிரியருரை வழக்கொடு முரணி அவ்வுரையிற் குற்றங் காண்டலும், அங்ஙனங் குற்றங் கண்டார்க்குத் துணை நின்று அவருரை நிறுத்துதற் பொருட்டு ஆசிரியர் தெய்வப் புலமைத் திறத்தை இழித்துக்கூறி யங்ஙனங் கூறுதலாற் கழுவாயின்றிக் கருநெறி நரகிற் கிடந்துழலுதற் கேதுவாகிய பெரியதொரு குற்றம் புரிந்து வருதலும் பல்கித் தாங்கெடுதலல் லாமலுந் தம்மைச் சார்ந்த அறிவின் மாந்தர்க்கும் அங்ஙனஞ் செய்யக் கற்பித்து ஆரவாரஞ் செய்தலின், அச்செருக் குரையாளர் மறுக்க மொழியவும் நல்லறிவாளர் நயப்பது வேண்டியும் ஆசிரியர் நக்கீரனார் வரலாறும், அவர் தெய்வப் புலவரென்பதும். அவரருளிச் செய்த நூல் வரலாறும், களவியலுரை இவர் கண்டதன்றென்பாருரைக்குமாறும், அங்ஙனங் கூறுவாருரை பொருந்தாதென்பதும், பிற்காலத் தார் இவருரையில் இலக்கண வழுவாராய்ந்தவாறும்,

அவ்வாராய்ச்சி பயனில் புல்லுரையேயாமென்பதும் பிறவுந் தந்து காட்டி முடித்தலை நுதலியெடுத்துக் கொள்ளப்பட்ட திவ்வுரை யென்பது.

நக்கீரனார் வரலாறு

இவர் ஆண்டாண்டு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்' என்று கூறப்படுதலானும். பொருளதி கார வுரையில் ஆசிரியர் நக்சினார்க்கினியர் இவரைப் ‘புலவுத் துறந்த பொய்யா நோன்பினர்' என்றெழுதலானும் இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/221&oldid=1585828" இலிருந்து மீள்விக்கப்பட்டது