உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

189

சைவவேளாளரிற் கணக்கர் வகுப்பிற் பிறந்தவரென்பதும் பெறப்படும். இனியிவரைச் சங்கறுப்ப தெங்கள் குலம்' எனுஞ் செய்யுளே பற்றி யக்குலத்தினரென்பாருமுளர்; இவ்வரலாறு ஆன்றோர் நூலுரைகளிற் காணப்படாமையானும் இதனை நிறுத்தும் வேறு உறுதியுரைகள் வேறொருவாற்றாற் பெறப்படாமையானும், தொல்லாசிரியர் மெய்யுரையொடு மாறுபடுதலானும் அங்ஙனங் கூறுவாருரை வறிதாமென் றொழிக. இவர் பிறந்தவூர்மதுரை மாநகரேயாம். இவர் இளம் பருவத்தில் யாங்ஙன மொழுகினா ரென்பதும், இவரது சிறந்த வுரிமைக் குணங்களும், இவர் எக்காலத்து எவ்வரசன் சங்கமேறியிருந்து தமிழாராய்ந்தா ரென்பதும் பிறவும் ஒருதலையாகத் துணிந்துரைக்கு மெய்ந் நூற்பொருள் காணாமையான் அவை இனிது விளங்கா. இனி இவர் சங்கமேறி யிருந்து தமிழாராய்ந்த ஞான்று இவரைக் குறித்தெழுந்த வரலாறும் ஓரொரு நூலில் ஓரொரு வறாய் ஒன்றோடொன்று மலைவுபட நிகழ்த்தப்படுதலின் அதுவும் ஒருநெறிப் படாதாயிற்று. அதுவும் அவ்வந்நூலிற் கிடந்தவாறே யீண்டெடுத்துக் காட்டுதும்.

அரசாண்டபோது

திருவிளையாடற் புராணம்

வங்கிய சூடாமணி யென்னுஞ் சண்பகமாறன் மதுரையிற் செங்கோலோச்சி வருநாளில் ஒருமுறை மரங்களும் புதல்களுங் கொடிகளுங் குழைத்து அரும்பவும் தென்றற் காற்றுப் பொதியமலைச் சாந்தத்தின் நறுமணத்தை அளவிக்கொண்டு மலர் முகைகளின் முழுநெறி யவிழ்த்து வண்டினம் யாழினுந் தீவியவாக ஒலிப்ப மெல்லிதின் வீசவும் இளவேனிற் காலம் வந்தது. அக்காலத்து ஒருநாள் சண்பகமாறன் தன் மனைவியோடு ஓரிளமரக்காவிற் புகுந்து ஆண்டுள்ள செய்குன்றின்மேல் வேறு இருந்தான். இருப்ப, மெல்லிதின் வீசுந் தென்றற் காற்றுப் பண்டுபோற் கமழாது வேறொரு தன்மைப்படக் கமழ்ந்தது. கமழ்தலுஞ் சிந்திப் பான், “என்னை! இம்மணம் இளமரக்காவின் வாயவிழ்ந்த மலர்களின் மணமன்று. காற்றுக்கு இயற்கையில் மண மில்லாமையின் அதற்குரியதுமன்று. இருந்தவாற்றான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/222&oldid=1585830" இலிருந்து மீள்விக்கப்பட்டது