உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

கவலுறுவாராயினார்.

மறைமலையம் 19

ஈதொரு வேறு தன்மைத்தான மணம் என்றிவ்வா றெல்லா மெண்ணித் திரும்பித் தன் மனைவியை நோக்கினிான். நோக்கினாற்கு வாய்ப்புடைத் தாயிற்றொரு கூந்தன் மணமா யிருந்தது. அம்மணம் தன் மனைவியின் கருநெறிக் குழலி லிருந்து மிக வினியதாகக் கமழ்ந்தது. பின்னர், 'இம்மணம் வள் கூந்தற்கியல்பினமைந்ததோ, அன்றிப் பூவும் நறுங் கூட்டும் இடப்படுதலிற் செயற்கையானமைந்ததோ, யான் கொண்ட இவ்வையுறவை யுணர்ந்து செய்யுள் செய்ய வல்லார்க்கு ஆயிரம் பொன்றருவேன்' என்று கோவில் புகுந்து அவன் தான் எண்ணியவாறே பொன் முடிந்த கிழியைக் கொணர்வித்துச் சங்கப்புலவர் முன் றூக்கினான். இதனைக் கண்ட சங்கப்புலவர் தம்மிற் றனித்தனி தேர்ந்து தாந்தாங் கண்டவாறே செய்யுள் செய்துரைப்ப அவை யொன்றும் பொருளிலவாதல் நோக்கிப் பெரிதும் எய்த்துக் இஃதிவ்வாறிருப்ப, ஆதிசைவர் மரபிற் பிறந்து, இளம்பருவத்தே தன்றந்தை தாயொழிய மாணி நிலைமேற் கொண்டொழுகும் தருமியென்னும் இளைஞன் தான் வதுவையயர்ந்து கொள்ளும் பெருவேட்கை யால் ஆலவாயி லவிர்சடைக் கடவுள் திருமுன் போந்து குறையிரப்பான்; “எந்தையே! அடியேன் தந்தை தாயரைச் சிறுபருவத்தே இழந்தேன்; இப்போது புதுமணங்கூடும் வேட்கையேன்; ஐயனே! என் மனக்கவலை தீர்த்தருளுதற்கு ல இது பதம்! இல்லறத்தொடு படுதலின்றி யெளியேன் நின்றிருவடிக்கு வழிபாடு செயற் பாலனோ, அல்லனே! நீ எல்லாமறிF! பாண்டியன் மனக்கோள் உணர்ந்தடியேன் ய்தற்பொருட்டு ஒரு செய்யுளியற்றித் தருக" என்றிவ்வா றெல்லாம் இரந்து வேண்டுதலும், சிவபெருமான் இரங்கிக் "கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி

னறியவு முளவோ நீயறியும் பூவே

وو

எனுஞ் செய்யுளை யியற்றி நல்க, அதனைக்கொண்டு போந்து சங்கப்புலவர் கையிற் கொடுப்ப, அவரும் அச்செய்யுட் சொல்வளமும் பொருள்வளமு மாய்ந்து பார்த்து ‘நல்ல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/223&oldid=1585831" இலிருந்து மீள்விக்கப்பட்டது