உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

191

நல்ல' என்று மகிழ்ந்தார். மகிழ்ந்து பாண்டியன் முன்சென் றவருரைப்பப் பாண்டியனுஞ் செய்யுட்பொருள் தன் கருத் தோடியைதலிற் பெரிது முவந்து 'புலவரொடுஞ் சென்று தமிழ் கொணர்ந்த மறையவன் ஆயிரம் பொன்னும் பெறுக வென்று கூறி நல்கினான். அவ்வாறு வேந்தன் நல்குதலும் அவைப்புறத்துத் தூக்கிய பொற்கிழியை யறுக்கப் புகுந்த மறையவனை நக்கீரனார் விலக்கி இச்செய்யுளிற் குற்றமுள தென்றார். என்றலும் மறையவன் மிக வருந்திக் கொணர்ந்த செய்யுளைச் சிவபெருமான் திருமுன் வைத்து "ஐயனே! வறுமையாலடியேன் படுந்துயர் குறிக்கொள்ளேன், சின்னாளுஞ் சிற்றறிவு முடைய புலவர் பேரறிவும் பெருந் தன்மையுமுடைய நின்செய்யுளிற் குற்றங் காண்பதே, அது வன்றியும் நின்னை நன்கு மதிப்பாரும் இலராவரே, இவ்வாறு நிகழ்ந்த இவ்விளிவரவு நினக்குறுவதன்றி எனக்கொன்று மில்லை' என்று மிகவிரங்கிக் கூறுதலும், சிவபெருமான் ஒரு புலவன் போல வடிவுகொண்டு வெளிப்பட்டுச் சங்கத்தார் வைகும் அவைக்களத்தைச் சேர்ந்து அவரை நோக்கி ‘நமது செய்யுட்கு வழுவேற்றினார் யார்?' என்றார்.

என்று

உடனே, நக்கீரனார் சிறிதும் அஞ்சாது 'நாமே அச் செய்யுட்கு வழுவுரைத்தாம்' என்றுரைப்பச் சிவபெருமான் 'வழு வென்னை?” என்று வினவினார். வினாதலும், ‘அதிற் சொல் வழுவின்று, மற்றுப் பொருள் வழுவுளதாம், என்னை? குழல் நறிதென்றல் கொழுவிய மலர்மணம் பெற்றுழி யன்றிக் குழல்தானே இயல்பாகக் கமழுத்தன்மைத்தன்றாம்; அன்றாக, அரிவை கூந்தலினறியவு முளவோ' அதற்கு இயல்பிலேயே விரை கமழுந் தன்மையுண்டென உலக வழக்கொடு மாறு கொண்டுரைத்தலி னென்பது' என்று விடுத்தார். அற்றேல், * நங்கைப் பெண்டிர்க்குங் குழன்மணஞ் செயற்கைத்தோ வென்றிறைவன் வினாதலும் அதுவு மவ்வாறே யென்றார். பின், வானர மகளிர்க்கும் அம் மணம் சயற்கைத்தோவென, அதுவு மன்னதோ யென்றார். அதன்பின், நீர் வழிபட்டேத்தும் திருக்காளத்தியப்பர் பாகத் தமர்ந்த ஞானப் பூங்கோதையார் ஈர்ங்குழலும் அந்நீர்மைய தோவென அதுவும் அந்நீரதே யென்றார் நக்கீரனார்.

6

ச்சொற் கேட்டலும் புரிசடைப் பெருமான் எரிவிழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/224&oldid=1585833" இலிருந்து மீள்விக்கப்பட்டது