உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் 19

திமைக்குந் தந்நுதல் விழிதிறப்ப, அதற்கும் அஞ்சாராய் நக்கீரனார் பொய்விழி யிந்திரன்போல் நும் மெய்ம்முழுதும் விழியாயினுஞ் சிறிது மஞ்சேன், நும் பாடல் பொருட் குற்றமெய்தி வடுப்பட்டது தேற்றமேயென்றார். இதற்குள் L மதிமுகிழ்ச் சடையோன் நுதல் விழிச் செந்தீ வீசிய வெப்பம் பாறாது பொற்றாமரைத் தடத்துள் விழுந்தார் நக்கீரனார். சிவபெருமானும் தம் வடிவங் கரந்து மறைந்தார்.

இனி, ஏனைச் சங்கப்புலவ ரெல்லாரும் மெய்விதிர் விதிர்த்து உள்ளமுடைந்து, அரசு போகிய குடியும், விழுமிய நடுமணியிழந்த முத்துவடமும், அறிவின் மக்கள் கல்வியும், கொழுமதியில்லா வானும்போல், நக்கீரனாரைஇழக்கப் பெறுதலாற் பெரிதும் பொலிவிழந்து, வருந்தி

வி

றைவ

னொடு வாதுசெய்த பிழை யாங்ஙனந்தீருமோ? உய்வதேது' என்று எண்ணிப் பின்னர் ஒருவாறு தேறுதலடைந்து று சிவபெருமான் திருமுன்படைந்து ‘அரக்கன் பொருப்பெடுத் தெய்திய விடரைப் போக்கிய இறைவனே; நஞ்சமுண்ட அண்ணலே! நல்லவுந் தீயவுமியற்றினார்க்கு நிரலே இன்பமுந் துன்பமும் மீந்தவரை யுய்விக்கும் பேரருளினை, இங்ஙனம் ஒறுத்தது சால்புடையதாயினும், இப்போது அப்பிழையைப் பொறுத்தருள்க' என்று பெரிதுங் குறை யிரப்ப, அருள்வள்ளல் உவந்து பொற்றாமரைத் தடத் தருகிற் புலவர் குழாம் நடுவில் தோன்றி நின்று அருட்கண் நோக்கு தலும் நக்கீரனார் பொறிபுலன் கரணங்களெல்லாந் தூய வாகி ஒளிவிரிக்கும் மேலான வடிவத்துடன் அன்புருவாய்க் கரையேறி வந்து ‘பூங்கோதையார் தெய்வக் கூந்தலுக்குக் குறை கூறிய பொல்லா நாவுரையைத் திருக்காளத்தியப்ப ரன்றி வேறியார் பொறுப்பார்' என்று ஆழவாராய்ந்து கைலைபாதி காளத்திபாதி யந்தாதி பாடியருளினார்; அப்போதே 'கோவப் பிரசாத' மும் 'பெருந்தேவபாணி'யும் 'திருவெழு கூற்றிருக்கை'யும் வேறுவே றியற்றிச் சிவ பருமான் றிருவடிமேற் சாத்தி நாவுரை குழற, மயிர் சிலிர்ப்ப, உள்ளங் குழைந்து உச்சிக்கூப்பிய கையுடன் பன் முறை குடந்தம்பட்டுத் தொழுதங்கிருந்தார். பின்னர்ச் சில நாட்சென்று ஆலவாயிலழனிறக் கடவுள் குறுமுனிவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/225&oldid=1585834" இலிருந்து மீள்விக்கப்பட்டது