உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

193

யழைத்து நக்கீரனார்க்கு இலக்கணங் கற்பிக்கச் செய்தன ரென்று மிக விரித்துக் கூறும். இனி,

சீகாளத்திப் புராணம்

மதுரை மாநகரிற் பாண்டியன் செங்கோலோச்சு நாளில் நக்கீரனார் முதலிய சான்றோர் இறைவனாற் கொடுத்தருளப்பட்ட தெய்வப் பலகை தம்புலமை வரம் பறித்து நிலையிட்டிடந்தர அதன்மீ தேறியிருந்து செழுந் தமிழ் ஆராய்ந்திருந்தார். இவ்வாறிருப்ப ஒருநாட் பாண்டியன் தன் பொன்மாடத்து மேனிலைமேல் தன் ஆருயிர்க் காதலி யொடும் அமர்ந்தான். ஆயகாலையில் இளந்தென்றல் அவ் வணங்கின் குழன் மணத்தை அளைந்துகொண்டு வீசப் பாண்டியனும் இது நம் மனைவி குழன் ன் மண மணமென்று துணிந்து பின்றான் கருதிய விதனையமைத்துச் செய்யுள் இயற்றும் புலவர் ஆயிரம் பொன் கொள்பவென்று அவ் வாயிரம் பொன்னையுமுடிந்த கிழியொன்றைச் சங்க மண்டபத்தின் முன் தூக்கினான். இதனைக் கண்ட சங்கப் புலவரெல்லாருந் தாந்தாங் கண்டவாறே பொருளமைத்துப் பாண்டியனுக் குரைப்ப அவனும் அவற்றையெல்லாம் மறுத்துக் கூறினான். பொற்கிழி யறுப்பவரின்றி யிருந்தது. இவ்வாறிருப்பப் பாண்டிய நாட்டில் மாரிவறண்டு கடுங்கதிர் வம்மை மிகுந்து உலகமெல்லாம் பொறுக்கலாற்றாத காடியதொரு வற்கட காலம் வந்தது. உயிர்களெல்லாம் உய்வது காணாமற் பெருந்துயருழந்தனர்.

அப்போது ஆலவாயிலவிர்சடைக் கடவுளைப் பூசித்து வழிபடுந் தலைமையுடைய தருமியென்னும் அந்தணர் இனி நாம் உயிர் பிழைக்குமாறில்லை யாதலின் வளமலிந்த நாடு நோக்கிச் செல்லுதும் எனத் துணிந்து சிவபெருமான் றிருமுன் படைந்து ‘பெரும் இவ்விடத்தில் இனி யிருந்தாற் சாவேன், வேறு நாடு புகுந்து மழைவளஞ் சுரந்த பின் மீண்டும் இவ்விடமணைந்து நின்றிருவடித்தொழும் பியற்றுவேன் என்று பிரிவதற்காற்றாது தொழுது அழுதார். அகங்குழையாதே, வழுதி தன் மனத்தடக்கிய பொரு டெரித்துச் செய்யுள் செய்வார்க்குத் தருதற்பொருட்டு ஆயிரம் பொன் முடிந்த கிழியொன்று தூக்கினான். அதனை

அழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/226&oldid=1585836" இலிருந்து மீள்விக்கப்பட்டது