உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 19

இச்செய்யுளறைந்து பெறுக' என்றருளிக் "கொங்குதேர் வாழ்க்கை” என்னுஞ் செய்யுளை நல்கினார் ஆலவாயமர்ந்த வண்ணலார். நல்கியதனை யேற்றுப் பாண்டியன் முன் போந்து அவன் செவியிலமிழ்து உகுத்ததுபோற் சொல்ல லும், மற்றவனுமிதனைக் கொண்டுபோய்ச் சங்கப் புலவர்க்குச் சொல்லியவரை யுடம்படுத்துக வென்றான்.

மண

அந்தணரும் புலவர் முன் அவ்வாறே போந்திசைப்பப் புலவரெல்லாரும் உவக்கும் வழி, ஆங்கவருள் நக்கீரனார் 'இப்பாக் குற்றமுடைத்து' என்றார். என்றலும் மறையவன் துணுக்குற்றுக் கடவுளிடத்திதனைத் தெரிவிப்ப அவரும் புறம் போந்து புலவரை நோக்கி ‘இதில் வழுவாராய்ந்தார் யார்?' என்று கேட்ப, நக்கீரனார் ‘நான்' என அவர் 'குற்றமியாது’ எனக் குழலுக்குச் செயற்கை மணமன்றி இயற்கை றி மிலதாக, அதனை யுள்ளதுபோற் கூறுதலின் இஃதில்லது கூறலென்னுங் குற்றமாமென்றார் நக்கீரனார். இறைவனார் அரம்பையர் குழலுஞ் செயற்கை மணத்ததோ' என, 'அதுவு மத்தகையதே' என்றார் நக்கீரனார். பின் இறைவனார், இறைவி கூந்த லெத்தன்மைத்து' என, ‘அதுவு மத்தன்மைத்தே’ என்றார் நக்கீரனார். உடனே இறைவன் நுதல்விழிதிறப்ப, 'யான் வடிவெலாங் கண்காட்டினு மஞ்சேன். அச்செய்யுளிற் குற்றங் குற்றமே' யென்றார் நக்கீரனார். பின்னர்ச் சிவபெருமான் 'எம்மொடு முரணி இமயம் பயந்த வுமை கூந்தலுக்குங் குறை சொல்லத் துணிந்தமையால், ‘அறிவிலாய்! நீ குறைநோய் கொண்டு வையமெங்கும் அலைக என நக்கீரனார் உ னடுங்கி ‘அருட் கடலே! புழுத்தலை நாயினேன் கூறிய அறியாப் பொய்யுரை பொறுத்தருளல் வேண்டும் என்று பலகா லிறைஞ்சி நாத்தழுதழுப்ப வாழ்த்தினார். இவரது வழிபாட்டிற்கிரங்கி அத்தனார் த்தொழுநோய் கயிலை காணிற் றீரும்' என்று மறைந்தார். பாண்டியன் முதலானோரும் இறைவன் திருவிளையாடலை நினைந்து வியந்தார். தருமியென்னுமந்தணர் பொற்கிழி பெற்று வாழ்ந்தார். நாடு வறப்பு நீங்கி வளஞ்சுரந்தது. இதன்பின் நக்கீரனார்க்குத் தொழுநோய் முறுகி விரல் நிரை யழுகி விழுதன் முதலியன முறைமுறை முதிர்ந்து பெருந்துயர் மிக்கது. நக்கீரனாருமிதனைக் கயிலை கண்டு தீர்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/227&oldid=1585837" இலிருந்து மீள்விக்கப்பட்டது