உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

195

கோடுமென்று ஊக்கிச் சங்கப்புலவர் மிக்க வருந்த அரிதிற் பிரிந்து புறம் போந்து பல நாடு, நகர், காடு, மலை, மரு நிலங்கடந்து காசி, திருக்கேதாரம் முதலிய வடநாட்டுச் சிவப்பதிகளைப் போற்றி, இமயமலைக்குச் செல்லும் வழியிற் செல்வார் கைகால் குறைந்து வெள்ளென்பு தோன்ற மிகவரிதிற் பெயர்ந்து தாம் போம் வழியில் ஒரு பெரிய தட மொன்று கண்டார். அக்குளக்கரை ஒரு பெரிய ஆலமரம் ரு நிற்ப அதனை யடைந்து மனம் விரும்பிச் சிறிதிளைப் பாறினார். அங்ஙனமிருப்புழி, அம்மரக்கோட்டில் ஓரிலை யுதிர்ந்து ஒரு பாதி கரையிலும் பிறிதொரு பாதி நீரிலும்பட விழுந்தது. விழக் கரையில் விழுந்த பகுதியொரு மீனுண் குருகாயும் நீரில் விழுந்த பகுதியதற்கிரையாம் மீனாயும் வடிவங்கொண்டொன்றை யொன்றீர்த்தன.

ரு

இப்புதுமையைக் கண்டு வியந்து அதனை நோக்கி வைகிய நக்கீரனாரைக் கதுமென ஒரு பெரும்பூதந் தோன்றி, உழைமானிளங்கன்றைக் கவர்ந்த உழுவை போலக் கவர்ந்து சென்று ஒரு மலை முழைஞ்சினுட் புகுத்துத் தாளிட்டுச் சென்றது. செல்ல, அம்மலை முழைஞ்சினுள் முன்னரே தொண்ணூற் றொன்பது

யிருந்த தாள்ளாயிரத்துத்

மக்களும் நக்கீரனாரை நோக்கிச் சொல்வார்: "ஐய! நீ வருதலால் ஆயிரமென்னுந் தொகை நிரம்பியது. இப்பூதம் நீராடச் சென்றது. திரும்பி வந்ததும்நம்மையெல்லாம் ஒருங்கே செகுத்து உண்ணும் நீ வராவிடில் நீ இ வ்விடர் நேராதுகாண்' என்று மிகநொந்து கூறினார். இது கேட்ட நக்கீரனார் அறிவுமாழ்கிச் சிறிதும் இடர்ப்படாது அவர்க்கு நேரும் ஏதத்தை நீக்குதற்கு முருகக்கடவுள் வுள் திருவடித் தாமரைகளை வழுத்தி ஆறெழுத்தினையு மோதுவலென்று தெளிந்து அவ்வாறே யோதித் திருமுருகாற்றுப்படை மொழிந்தார். மொழிதலும் அருள் வள்ளலாகிய அறுமுகக் கடவுள் குறுநகை யிலங்கத் தோன்றி, அணுகிய பூதத்தைக் கதையா லடித்து வீழ்த்தி மலை முழையிலுள்ளோரை விடு வித்தார்.

66

தன்பின், நக்கீரனார் முருகனைத் தொழுது தாழுது “மறை முதல்வ! உமை புதல்வ! ஆலவாயமர்ந்த நீலகண்டனைச் செருக்குரை பகர்ந்த வென் இழுக்க மொழியக் கயிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/228&oldid=1585838" இலிருந்து மீள்விக்கப்பட்டது