உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் 19

காணுதி யென்றனன் கண்ணுதல், அண்ணலே! இன்னுமது கண்டிலேன், இங்கென் விழுமந் தீர்த்தது காட்டுதியால், என்றழுது குறையிரப்பச் செவ்வேளிரங்கிக் “கயிலை யென்று வாளா திசைபுணர்ந்தோதாது கூறினானைய னிதனால், தென் கயிலையாகிய காளத்தியானு மிந்நோய் தீரும்" என்று நினைந்து நக்கீரனாரை நோக்கி 'இப்பொய்கையில் மூழ் கினாற் கயிலைப் பொருப்பைக் காண்பை’ என, அவரும் முருகனை இறைஞ்சி யேத்தி அவ்வாறே அப்பொய்கையின் மூழ்கிப் பொன்முகலி தீர்த்தத்தி னெழுந்தார். எழுதலும் மேனிமேற் பரவிய நோயுந் தீர்ந்து முளையிள ஞாயிறு வி எங்குவதென்ன ஒளிவிரியத் தோன்றிப் பாவிற் பொதிந்து கிடந்த நுண்பொருள் பெற்று உவந்தான் போலச் சிவ ருமானை நேரிற்கண்டு கைகள் தலைமேற் கூம்பக் கண்ணீர் முத்தென அரும்ப நாவுரை குழறப் பரவிப் பரவிக் காளத்தியப்பரும் கயிலையப்பரும் வேறென்னுங் கருத்தின்றி யொற்றுமை கொளுத்திக் "கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி கட்ட ளையிட்டருளினார் நக்கீரனார் என்று விரித்து விளக்கும். இனி,

திருப்பரங்கிரிப் புராணம்

தமிழ்க்கடலை யளந்துகொண்ட அறிவின் மாட்சிமைப் பட்ட நக்கீரனார் பரங்குன்றிற் சரவணப்பூந்தடத்தில் நாடொறுங் குடைந்து பூசனைக்கடன் முறைபெறக் கழிப்பிப் பின் மதுரைமா நகர் செல்வார். இனித் தேவரிற் சிறுநுதலம்மை குறுமருங்கமைந்த மறியமை கையின் மாணிக்க வண்ணரையும் மக்களிற் கயன்மீனுயர்த்திய வழுதியையுமன்றிப் பிறரொருவரையுஞ் செய்யுளிலமைத்துப் பாடுவதில்லை என்னும் உறுதிக்கோளுடையார். யார். இவ் வொழுகலாறுடைய நக்கீரனாரை யொறுத்துத் தான் பாடல் பெறுவதற் கெண்ணிய முருகக்கடவுள் பரங்கிக் குன்றிற் சரவணப் பொய்கையி லவர் நீராடப்போதும்பொழுதறிந்து தன்பாலுள்ள அண்டாபரணனை யழைத்து 'நக்கீரனை யொருகுறையேற்றி நமது மலையிற் சிறைப் புகுத்தி மீளுக என்று பணித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/229&oldid=1585840" இலிருந்து மீள்விக்கப்பட்டது