உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

197

அப்பணிமேற் கொண்டோன் போந்து, முறைப்படி பூசனைப் பெரும்பயமாற்றி பரும்பயமாற்றி யஞ்செழுத் துருவேற்றிக் கொண்டு கரைமருங்கோங்கிய ஆலமர நிழலில் ஒரு பாறை மீதிருக்கும் நக்கீரனாரெதிரில் பொய்கைக் கரையில் ஓராலிலையைக் கிள்ளியிட அது கரையிலொருபாதியும் நீரிலொருபாதியுமாக விழுந்தது. விழுந்த இலையின் கரையிற் படிந்த ஒரு கூறு குருகாயும் நீரிற் படிந்த பிறிதொரு கூறு கயலாயும் வடிவு திரிந்து, இவ்விரண்டும் இருபுறம் பதைப்பது கண்டார். கண்டு உள்ளம் நைந்து இரங்கி யவற்றினருகிற் போந்து நகத்தாற் கிள்ளிப் பிரித்துவிட, அவையிரண்டும் வாயங்காந்து குருதிகான் றிறந்தன. அக்கணத்தில்! அண் பரணன் அழன்று சீறியெதிர்ந்து “முருகனுறையு மிக்குன்றிற் கொலைபுரிந்தனை” என்றுரைத்து வெருவப் பிடித்துச் சென்று குகையினுட் புகுத்துப் பாறை மூடிப்போயினான். நக்கீரனார் பெரிதும் வருந்தி இது து முருகனைப் பாடாக் குறையென்று அருட் குறிப்பாணுணர்ந்து 'உலகம்' என் றெடுத்துக் ‘கிழவன்' என்று முடித்துத் திருமுருகாற்றுப்படை யருளிச் செய்தார். இனியிதிற் ‘கிழவன்' என்று முடித்தமை யாற் ‘கிழவனாய் வருவதற்கு நமக்கு நாட்செல்லும்' என்று கனவினருளிச் செவ்வேள் மறைந்தார். இதனை யுணர்ந் தெழுந்த நக்கீரனார் 'இளையோன்' என முடிக்குஞ் சீரை மாற்றிக் கூறுதலும் திருமுருகன் றோன்றி அவர்க்கு அருணல்கினான் என்று சுருங்கக் கூறும்.

னி இ வை தம்முள் திருவிளையாடற் புராணம், ஆசிரியர் நக்கீரனார் ‘கொங்குதேர் வாழ்க்கை' எனுஞ் சய்யுளிற் குற்றமாராய்ந்தவாறும், சிவபெருமான் அவரை

யொறுத்துணர்த்தியவாறு மாத்திரமே யுரைப்பச் சிகாளத்திப் புராணம் அவர் அச்செய்யுளிற் குற்றம் ஆராய்ந்தவாறும், அங்ஙனம் ஆராய்தலாற் போந்த பெருங்குற்றங் கடிதற்பொருட்டுக் கயிலைக்குச் செல்லும் வழியில் முருகக்கடவுள் திருவருணோக்கஞ் சித்திக்கப் பெற்றுக் காளத்தி க மீண்டு இறைவனைத் தொழுது கிடந்தவாறும் கூறத் திருப்பரங்கிரிப் புராணம் அவர் முருகக்கடவுள் திருவருட் குறிப்பாற் சிறையிடப்பட்டுத் திருமுருகாற்றுப்படை இயற்றியுய்ந்தவாறு மாத்திரமே ஓதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/230&oldid=1585841" இலிருந்து மீள்விக்கப்பட்டது