உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் 19

யொழிதன்மேற் கிளந்து கூறிய மூன்று வரலாற்றையும் உய்த்து நோக்குவார்க்கு இனிது விளங்கும்.

னி இம் மூவகை வரலாற்றுள்ளும், திருவிளையாடற் புராண முடையார் தன் மனைவி குழன் மணத்தை வியந்து காண்ட பாண்டியன் வங்கிய சூடாமணி யென்னுஞ் சண்பகமாறனென்பர்; சீகாளத்திப் புராண முடையார் வறிதே பாண்டியனென்று கூறி யொழிந்தார்; திருப்பரங்கிரிப் புராண முடையார் அவ்வரலாற்றை முழுவதுமே கூறா தொழிந்தார். புறநானூறு முதலிய தொகை நிலைச் செய்யுட் களை உற்றுணர்வார்க்கு வங்கிய சூடாமணி சண்பகமாறன் எனும் பெயர்கள் புதுமையுடையனவாய்த் தோன்றும். பழைய தமிழ் வேந்தர்கட்கும் மக்களுக்கும் இடப்பட்டு வழங்கிய பெயர்கள் செவ்விய தமிழ்ச்சொற்களாகவாதல், வடசொற்கள் விரவினும் அவை தமிழ்ச் சொற்போல மெல் லென்றிசைக்கும் மாட்சியுடைய வாகவாதல் நிகழுந்தன்மைய வாம்; ‘பாண்டியன் அறிவுரை நம்பி', 'நெடுஞ்செழியன்' உக்கிரப்பெருவழுதி,மாவளத்தான்,' மாவளத்தான்,' 'வேற்பஃறடக்கை பெருநற்கிள்ளி', 'இளஞ்சேட்சென்னி’, ‘சேரமான்மாவெண்கோ', யானைக்கட்சேய் மாந்தருஞ் சேரலிரும்பொறை’, ‘உதியஞ் சேரலாதன்,' டைக்காடனார்,' 'ஒக்கூர்மாசாத்தனார், கண்ணகனார்’, 'கயமனார்' என்றற் றொடக்கத்துப் பெயர் களே இதனை இனிது நிறுத்துக் கரி போக்குமென்பது. இனித் தமிழிற் றிருவிளையாடற்புராணம் இயற்றிய ஆசிரியர் இவ்வரலாறுகளைப் பன்முறை யாய்ந்து பொருந்தக் கூறுமாறின்றி வடநூலிற் கிடந்தவாறே யெடுத்துத் தமிழில் மொழிபெயர்த்திட்டார். வடநூலாசிரியர் பெரும்பாலும் ஒரு நூலியற்றப் புகுந்துழி உலக வழக்கொடும் ஆன்றோர் வழக்கொடும் மாறுபடாவாறு வரலாற்று முறைமையை யுணர்ந்து ஆய்ந்து பொருந்தக் கூறுவதின்றித் தாந்தாங் கண்டவாறே யொன்றும் பலவு மெடுத்துக் கொண்டு அவற்றை மாற்றியுங் குறைத்தும் வேறு பலவற்றை இடையிற் புகுத்தி விரித்தும் உண்மை தோன்றாவாறு பலபடக் கூறுவர். இவ்வாறியற்றிய நூற்பொருளியல்பு அறியாதார் இதனையே முதனூலாகக் கொண்டு வழிநூல் இயற்றுவர். அங்ஙன மியற்றும் வழி அவ்வழி நூலும் அதனாற் பழுதுபடுமா

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/231&oldid=1585843" இலிருந்து மீள்விக்கப்பட்டது