உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

199

வட

மென்பது. இனி வடநூற்பொருளைத் தழுவாது செந்தமிழ் நூலியற்றிய தொல்லாசிரிய ரெல்லாரும் உள்பொருளைக் கிடந்தவா றெடுத்து உண்மை தோன்ற உரிமையின் விளக்கி உயர்ந்தாரென்பது சிலப்பதிகாரம், பெரியபுராணம் முதலிய பழைய தமிழ் நூல்களால் உணர்ந்துகொள்க. நூலாசிரியர் தம் மொழிமேற் சென்ற கடும்பற்றுள்ளத்தால் தமிழில் வழங்கிய மக்கள் இயற்பெயர்களையும் வடசொல்லாற் றிரித்துக் கூறுதலிற் ‘சண்பகமாறன் ’, ‘வங்கிய சூடாமணி' எனும் இயற் பெயர்கள் தமிழ்ச் சொற்களாய்த் தமிழில் வழங்கியவாறு ஒருவாற்றானும் புலப்படவில்லை அல்லதூஉம், வடநூற் றிருவிளையாடற் புராணமுடையார் தாமே படைத் திட்டுக் கொண் டெழுதியனவோ வென்று எண்ணுதற்கும் டஞ் ஞ்செய்து கிடக்கும். என்னை? ஒருவ ரியற்பெயரைக் கூறப்புகுந்தார்க்கு மொழிவேற்றுமைபற்றி அதனையுந் தம் மொழியில் மொழிபெயர்த்துக்கோடல் பெரிதும் இழுக்காய் முடிதலானும், இயற்பெயரைக் கிடந்தவாறே கூறுதலாற் போந்த வழுவின்மையின் அதனையுள்ளவாறே யுணர்ந்தார் இயற்பெயரைக் கிளந்தோதுவராதலானுமென்பது. இனிச் சீகாளத்திப் புராணமுடையார் தாமாராய்ந்தும் பெறப்படாத யற்பெயரை வடமொழியிற் கிடந்தவாறே கூறாதொழிதல் பெரிதும் நன்கு மதிக்கப்படுவதொன்றா மென்பது.

இனிக் கதை வரலாறும் ஒன்றோடொன்று மலைவு படுமாறு காட்டுதும்: திருவிளையாடற் புராணமுடையார் பாண்டியன் இளவேனிற்காலத்தொருநாள் இளமரக்ககாவிற் புகுந்து தன் மனைவியொடு வைகினானெனக் கூறினார்; சீகாளத்திப் புராணமுடையார் பாண்டியன் தன் மாளிகை மேனிலைமேல் தன் மனைவியோடிருந்தானென்றார்; அவர், தாய் தந்தையரை இளம்பருவத்தே இழந்த தருமியென்னு L மறைச்சிறுவன் தான் மணம் புரிதற்குப் பொருள்வேண்டி இறைவனை இரந்தானென்றார்; இவர், பாண்டிநாட்டில் மழைவறங் கூர்ந்து வற்கடகால மிகத் தான் வறுமையால் நலிந்து வேறுநாடு போதற்கெண்ணித் தருமியென்பவன் இறைவனை விடை கேட்ப இறைவனிரங்கிச் செய்யுள் கொடுத்தான் என்றார்; அவர், செய்யுள் பெற்ற தருமி அதனை முதலிற் சங்கப் புலவர்க்குக் காட்ட அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/232&oldid=1585844" இலிருந்து மீள்விக்கப்பட்டது