உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் 19

நல்லவென்று வியந்து பாண்டியனுக்குச் சென்றுரைப்ப அவனும் மகிழ்ந்து தருமிக்குப் பொற்கிழி அறுத்துக் கொள்ளப் பணிப்ப அவ்வாறே போந்து தருமி அறுக்கப் புகுங்கால் நக்கீரனார் மறுத்தார் என்பர்; இவர், அதனைப் பெற்ற தருமி முதலிற் பாண்டியனிடத்திற் சென்று காட்ட அவன் உவந்து மற்றிதனைச் சங்கப் புலவர்க்கு ஏற்பித் துரைத்திரென அவ்வாறே அவரும் போந்து சொல்லக் கேட்ட புலவருள் நக்கீரனார் இது குற்றமுடைத்தென்றார் என்று கூறினார்; அவர், இறைவன் புலவனாய்த் தோன்றி நீர் வழிபடும் ஞானப் பூங்கோதையார் கூந்தலும் அத்தகை யதோவென்று வினாவினார் என்றார்; இவர், வாளா இறைவி கூந்தலும் அத்தன்மையதோ வென்றாரென்றார்; அவர் இறைவன் திறந்த நுதல்விழி வெப்பம் பொறாது நக்கீரனார் பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார் என்றார்; இவர், இறைவன் நக்கீரனாரைக் குறைநோய் கொள்கவென அதனை அஞ்சித்தொழுத நக்கீரனாரைக் கயிலை காணில் இது தீருமென்று கூறி மறைந்தான் என்றார்.

று

னிச் சீகாளத்திப் புராணமுடையாரும் திருப்பரங் கிரிப் புராணமுடையாரும் தம்முள் மாறுகொண்டுரைக்கு மாறு காட்டுதும். சீகாளத்திப் புராணமுடையார், நக்கீரனார் கயிலை கண்டு தொழுதற் கெண்ணித் திருக்கேதார முதலிய வடநாட்டுத் திருப்பதிகளைக் கடந்து செல்லுழிச் செல்லு நெறியில் ஒரு குளமும் அதன் கரையிற் செவ்விய ஓர் ஆல மரமும் நிற்பக் கண்டு அதன் நிழலிற் சிறிது இளைப்பாறி யிருப்ப அம்மரத்தின் இலை யுதிர்வையே தலைக்கீடாகக் காண்டு ஒரு பூதம் அவரை ஒரு மலைக்குகையிற் புகுத்த ண்டுத் தமக்கு முன்னிருந்தவரைக் கண்டிரங்கி அவர் பொருட்டுத் ‘திருமுருகாற்றுப்படை' மொழிந்து எல்லாரை யும் உய்யக் கொண்டாரென்பர்; திருப்பரங்கிரிப் புராண முடையார்,நாடொறும் பரங்குன்றிற் சுனையில் நாட்கடன் கழித்துத் தம்மைத் தொழாது செல்லும் நக்கீரனாரைப் பரங்குன்றின் முழையிற் சிறைப் புகுத்திப் பின் ஆற்றுப்படை பாடுவித்தார் முருகக் கடவுள் என்பர்.

L

இனி இவற்றுட் பாண்டியன் தன் மனைவியொடு வைகியவாற்றை டமாத்திரையான் ருவரும் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/233&oldid=1585845" இலிருந்து மீள்விக்கப்பட்டது