உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை :

201

படுத்துக் கூறுதலின் அது பெரியதொரு வேற்றுமை யாகா தென்பது. இனி இறைவன்மாட்டு அன்பு முதிர்ந்து பொருண் மேற் சென்ற பற்றைத் துவரத்துறந்து கரணங்கள் தூயவாகி அவ்விறைவன் அருள்வழி நிற்குந் திருத்தொண்டர் இறைவனை எமக்கு மனைவி வேண்டும், பொருள் வேண்டு மென்று குறையிரந்து கொள்ளாது தங்குறையை அறிவித்தன் மாத்திரையில் அமைந்தொழுகுந் தன்மையராகலான் திருவிளையாடற் புராணமுடையார் இறைவனிடத்து உரிமையன்பு முறையுளி நிகழ்த்துத் தருமி யென்பவன்றான் சன்றிறைவனை வதுவையயர்தற் பொருட்டுப் பொருள் தரல் வேண்டுமெனக் குறையிரந் மனக் குறையிரந் தானாகக் கூறுதல் பொருத்தமின்றாம். இனிப் பாண்டி நாடு முழுவதூஉம் மாரிவறப்ப வளஞ் சுரவாது யாண்டும் வறுமை மிகுந்து மாவும் மக்களும் பெரியதோரிடருழந்தாரென்று அதனைத் தாம் நேரிற் கண்டிருந்த மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் *‘பன்னீராண்டு பாண்டி நன்னாடு, மன்னுயிர் மடிய மழைவள மிழந்தது' என்று நிலையிட்டுரைத்தலானும், இறையனராகப் பொருளுரைப் பாயிரத்தினும் இவ்வாறே கூறப்படுத லானும் அறிவுடை நன்மக்க ளெல்லாரும் இவ்வற்கடகால நிகழ்ச்சியைத் தழீஇக் காண்டு மொழிதலானும், சீகாளத்திப் புராணமுடையார் அவ்வற்கட காலத்தின் வறுமைநோய் பொறுக்கலாற்றாது தருமி யென்பவர் வேறு நாடு போதற்கு விடை பெறுதல் வேண்டி இறைவனைக் குறையிரந்தாரென்றல் உலக வழக்கொடும் புலனெறி வழக்கொடுந் திறம்பாத மெய்யுரையாம்.

வி

அல்லதூஉம், தருமியென்பவர் இறைவனை மனைவி வேண்டும் பொருள் வேண்டுமெனக் குறையிரவாது, வறுமைநோய் களைந்து கோடன் மாத்திரையே குறித்து றைவனை வேண்டினாராகக் கூறும் சீகாளத்திப் புராண முடையார் கூற்றுப் பெரிதும் நன்கு மதிக்கப்படுவதொன் றாம்; இவர் இவ்வரலாற்றின் மெய்ம்மை யாராய்ந்துணர்ந்து கூறினாரென்பது கடைப்பிடிக்க, இறைவன் தந்த செய்யுளைக் கொண்டு போந்து தருமி யென்னும் மறைச்சிறுவன் சங்கப் புலவர்க்குக் காட்டியவழி ஆங்கே நக்கீரனார் அதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/234&oldid=1585846" இலிருந்து மீள்விக்கப்பட்டது