உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் 19

குற்றமுடைத்தென இயம்பாது சங்கப்புலவர் அச்செய்யுளை வியந்து கொண்டு போய்ப் பாண்டியனுக்குரைப்ப அவனும் உவகைமிக்குப் பொற்கிழி பெறுகவென்ற சொற்படி தருமி கிழியறுக்கப் புகுந்தவழி யாண்டு அதற்குக் குற்றங் கூறினாரென்றல் ஒரு சிறிதும் பொருந்தாமையான். திரு விளையாடற் புராணமுடையார் கூற்று ஆன்றோர் வழக் கொடு மாறு கொள்ளும். மற்றுச் சீகாளத்திப் புராண முடையார், செய்யுள் பெற்றுக்கொண்ட தருமி யதனை முதலிற் பாண்டியனுக்குச் சென்று காட்ட அவன் உவந்து இதனைச் சங்கப் புலவர்க் கேற்பித்துப் பின் பொற்கிழி பறுகவென்று கூறினானென்றும் அவ்வாறே யவர் சென்று அதனை யுரைப்ப அப்போது நக்கீரனார் குற்றங் கூறினா ரென்றும் உலக வழக்கொடும் ஆன்றோரொழுக்கத்தொடும் மாறுகொள்ளாவாறு ஓதுதலின் இஃதுண்மை நிறுத்தும் பொன்மொழியாமென்பது. இனி இறைவன் புலவனாய்ப் போந்து நக்கீரனாரை நோக்கி இறுதியில் ஞானப்பூங் கோதையார் குழலும் அத்தன்மையதோவென வினாவி னாராகக் கூறும் சீகாளத்திப் புராணமுடையார் கூற்றினுஞ் சிறக்குமாம். குமாம். என்னை பொதுப்பட இறைவி றைவி கூந்தலை யெடுத்துக் கூறுதலாற் ‘கைலைபாதி காளத்தி பாதியந்தாதி’ பாடுதற்குக் காரணம் பிறிதொன்றாற் பெறப்படாமையா னன்பது. இனித் திருவிளையாடற் புராணமுடையார் இறைவன் திறந்த நுதல்விழி வெப்பம் பொறாது நக்கீரனார் பொற்றாமரையில் விழுந்தார் என்பதூஉம், சீகாளத்திப் புராணமுடையார் இறைவன் அவரைக் குறைநோய் கொள்க வெனக் கூறினானென்பதூஉம் மாறுபடாவாம்.

என்னை! நுதல்விழி திறந்த வளவில் தம்மெய்யில் வெம்மை மிகப் பொறுக்கலாற்றாக் கொடுந்துயர் விளை தலின், மற்றதனைப் பரிகரித்துக் கோடற்பொருட்டுப் பொற்றாமரைத் தடத்தில் வீழ்ந்து, பின் இறைவனருள் சிறிது முகிழ்த்தலின் அதனை நீக்கிவெளிப்பட்ட நக்கீரனாருக்கு முன்பற்றிய வம்மையால் மெய்நிலை மாறுபட்டுத் தாழுநோய் முதிர்ந்ததென்பது கருத்தாகலினென்க. இனி, நக்கீரனார் கயிலைகாணச் செல்லும் நெறியிற் பூதத்தினாற் கவரப்பட்டுத் திருமுருகாற்றுப்படை மொழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/235&oldid=1585847" இலிருந்து மீள்விக்கப்பட்டது