உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

203

நன்

உய்ந்தாரெனக் கூறும் சீகாளத்திப் புராணமுடையார் கூற்று மெய்ப்பொருள் நிலையிட்டுரைக்கும் அறிவுடை மொழியா மென்பதும், இவ்வாறன்றிப் பரங்குன்றில் முருகக்கடவுள் பாமாலை பெறுதற்கெண்ணி ஒருகாரணங் காட்டியவரை மழைமுழையிற் புகுத்திச் செய்யுள் கொண்டு பின் அவரைச் சிறைவீடு செய்து அருள் புரிந்தாரெனக் கூறும் திருப்பரங்கிரிப் புராணமுடையார் கூற்று உலக நெறியொடு மாறுகொண்டு யற்கையின் நட நடவாச் செயற்கைத் திறத்தைப் புனைந்தெடுத்துக் கூறுதலானும், அதனால் தாம் பாமாலை பெறுதற்கெண்ணுதலின் தன்னைப் பற்றுதலென்னுங் குற்றமும் நடுநிலை திரிந்து பொருத்தமி காரணத்தாற் சிறை புகுத்தலிற் சமனிலை வழுவுதலென்னுங் குற்றமும் இறைவன் மாட்டெய்துதலானும், இனி, நக்கீரர் தாமும் முருகக்கடவுளிடத் தெழுந்த அன்பினாற் செய்யுள் செய்யாது அச்சம்பற்றிச் செய்தாரெனவும், சிவபெருமா னையே பாடும் வழுவாநோன்புடையாராயின் அந்நோன் போடு இகலிப் பின் முருகனைப் பாடினாரெனவும், முருகக் கடவுள் தாமுந் தம்மாற் றொழப்படுந் தன்மையரல்ல ரென்று எண்ணினாரெனின் அது நூலுணர்வும் மெய்யுணர்வுமின்றி முருகனையும் மூத்தபிள்ளையாரையும் உமாதேவியாரையும் இறைவன்றா னொருவனே கொண்ட பல வேறு பட்ட அருட்கோலங்களாமென்று மறைமொழி கிளந்த மந்திர வுரை யோடு முரணி அக்கோலங்கள் தம்முள் வேறுபாடு கற்பித்துக் கொண்டொழுகுந் தெரிவின் மாந்த ரொழுக்கத் தொடுபட்டுச் சிறுமை எய்தினாரெனவுங் கொள்ளக் கிடக்குமாதலானும் அவருரை பொருந்தாதென்பதும் அறிவுடையா ரெல்லார்க்கும் இனிது விளங்குமென்பது. இனித் திருமுருகாற்றுப்படையில் அஃதியற்றப்பட்ட வரலாறு யாண்டுங் காணப்படாது.

அவ்வாறாயினும் அந்நூலில் அதனாசிரியர் திருப்பரங் குன்றை முதலெடுத்தோதுதலின், அவ்வாற்றானது திருப் பரங்குன்றிற் செய்யப்பட்டதென்று தென்று உய்த்துணர்ந்து கொள்ளாமோவெனின்; - கொள்ளாமன்றே, ஆசிரியர் நக்கீரனார் மதுரையிற்றோன்றி அதனையடுத்துள்ள பரங் குன்றின் மிக்க பற்றுடையராகலான் அதுபற்றி யதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/236&oldid=1585848" இலிருந்து மீள்விக்கப்பட்டது