உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

66

மறைமலையம் 19

குன்ற

முதலெடுத்தோதினாராதலின்; திருஞானசம்பந்தர் முதலான அருட்டிருவாளருந் தாந்தோன்றிய நகரைச் சிறந்தெடுத் தோதுதலும் இதனோடு ஒருபுடை யொற்றியுணரப்படு மென்பது. இனி ஏட்டுச் சுவடிகளில் திருமுருகாற்றுப் படையின் கீழ்க் குன்ற மெறிந்தாய் எனவும் மெறிந்ததுவும் எனவும் ரண்டு வெண்பாக்களெழுதப் பட்டுள்ளன; இவ்விரண்டு வெண்பாக்களின் நடை வளத்தையும், சொல்லமைதி, பொருளமைதிகளையும் உற்று நோக்கும்வழி; அவையிரண்டும் மிகப் பழையகாலத்தன வென்பதும், நக்கீரனார் இயற்றியனவேயாமென்பதும் இனிது விளங்கும். அல்லதூஉம் பத்துப்பாட்டுக்கள் ஒவ் வொன்றின் கீழும் அவ்வப்பாட்டுக்களின் கருத்துப் பொருளை விளக்கியும், அவ்வப்பாட்டுடைத் தலைமக்கள் பெரும்புகழ் கிளந்தும் ஒருவாற்றான் வரலாறு தெரிப்பன வாகிய ஒன்றிரண்டு மூன்று வண்பாக்கள் எழுதப் பட்டிருத்தலின் மற்றவை அவ்வவ்வாசிரியரால் தாந்தாம் பாடிய பாட்டுக்களின்கீழ் எழுதப்பட்டன வென்பது ஐயுற வின்றித் துணிந்து கொள்ளப் படுமென்பது, இம்முறை வழுவாது அப்பத்துப்பாட்டுக்களின் ஒன்றாகிய திருமுருகாற்றுப் படையினும், அதனாசிரியர் தாமும் அதன் வரலாறு கிளக்கும் இரண்டு செய்யுட்களெழுதினார்.

இ னி

வ்விரண்டு செய்யுட்களும் ஆசிரியர்தாம் ஆற்றுப்படை மொழிந்த பொழுதியற்றப்பட்டனவோ, ஆற்றுப்படையை யை ஏ ஏனை யொன்பது பாட்டுக்களுடன் கோவை செய்து முறைப்படுத்திய போது இயற்றப் பட்டனவோவென் றாராயலுறுவார்க்குத் துணிதற்கருவி யின்மையின் அவையும் விளங்கா. ஆயினும், கோவை செய்து முறைப்படுத்தியபோது ஒரு தலையான் அதன் வரலாறு தரித்தற்பொருட்டு அவை எழுதப்பட்டிருத்தல் வேண்டு மென்பது துணியப்படும். இவ்விரண்டிற் "குன்ற மெறிந் ததுவும்” எனுஞ் செய்யுளில் "இன்றெம்மைக் கைவிடா நின்றமையுங் கற்பொதும்பின் மீட்டமையும்” என்று கூறப் படுதலின், நக்கீரனார் மலைமுழையுட் சிறைப்பட்டவாறும், பின் மீட்கப் பட்டவாறும் ஒருதலையான் நிகழ்ந்தன வன்பது பெறப்படும். இனி, குன்றமெறிந்ததுவும்

66

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/237&oldid=1585849" இலிருந்து மீள்விக்கப்பட்டது