உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 19

மகிழ்வித்திடுவான். ஆகவே. காரியரூபமாகத் தோன்றுங் குடமும் அணிகலமுந் தேய்ந்து தேய்ந்து தத்தங் காரணநுட்ப அணுரூபமாக ஒடுங்கிய வழியும் அவற்றின் இருப்பு யாண்டும் உளதாவதேயன்றி வெறும்பாழாதல் ஒருவாற்றானும் ல்லை யாதலான், இதுபோல் உலக இருப்பும் யாண்டும் உளதாவதேயன்றி இலதாதல் இல்லையென் றொழிக. எம்முடைய ஊனவிழிகளுக்குத் தோன்றாமை பற்றி உலக இருப்பை மறுத்துரைத்தல் பெரிதுங் குற்றமாம்.

ம்

ஊசிநுனியிற் றங்கிய நீர்த்துகளை ஆங்கிலேய அறிவு நுாற் கலைஞர்கள் அமைத்திருக்கும் *பெருக்கக்கண்ணாடி யால் நோக்குவார்க்கு அதன்கண் அடங்கிய அளவிறந்த புழுக்களும் அப்புழுக்களின் வேறுவேறான புதுமைப் படைப்பு வடிவங்களும் அவற்றின் தொழில் வேறுபாடு களும் பிறவும் மிக்க வியப்புடையனவாய் விளங்கும். அக்கருவியின் உதவியின்றி நோக்குவார்க்கு அவை ஒரு சிறிதும் விளங்கா. இங்ஙனஞ் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமே முகிழ்ப்பதற்கு ஏதுவான கருவிகளுடன் அமைந்த மானுட யாக்கையின்கண் இருக்கப்பெறுவேமாகிய யாம் இறைவன் செய்யும் வியக்கத்தக்க அருட்காரிய வியல்பை எங்ஙனங் காண்பேம்? எவ்வாறு உரைப்பேம்? படைப்புக் காலத்தின் முன்னும் பேரூழிக்காலத்தின் பின்னும், மிகுநுட்ப இன்மைவடிவமாய் ஒடுங்கி விளங்கும் இவ்வுலகங்களையும் இவ்வுலகங்களில் வைகிய உயிர்களையும் யாண்டும் பர எல்லாப் பொருள்களையும் இருந்தவாறே கண்டறியும் ஞானக்கண் உடையனாகிய இறைவன் ஒருவனே காண்பான்; அக்காலத்தில் மிகு நுட்பகாரண இன்மைவடிவமான இ வ் வுலகங்களெல்லாம் வெள்ளிடையிற் றோன்றும் மலை போல அவன் ஞானக் கண்ணெதிரே பருப்பொருளாக விளங்குவனவாம். இவ்வாறாகலின் வ்வாறாகலின் ஊழிக்காலத்திலே இவ்வுலகங்களெல்லாம் வெறும்பாழாய் ஒழியும் என்பார் மொழி ஒரு சிறிதும் அடாதபோலியாய் முடியுமென்றுணர்க. உள் ள்பொருளை ல்லாத பாழ்பொருளாகத் திரித்தல் ஒருவரானும் ஒருகாலத்தும் முடிவதன்று என்பது பற்றியே விஞ்ஞான நூல் வல்லராகிய ஆங்கில நன்மக்களும்

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/295&oldid=1585907" இலிருந்து மீள்விக்கப்பட்டது