உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் -19

பொய்யாய் ஒழிந்தவழி, அவ் வுலகின்மேல் வைத்து உணரப்படுவதாகிய பிரமமும் பொய்யாய் ஒழிந்திடுமாகலற் பிரமம் மட்டும் உள்பொருளாய் நிலையுமென்று அவ ருரைத்த வாதம் போலியாயொழியும். அல்லதூஉம், காணப் படாத அருவமாகிய பிரமத்தின்கண்ணே உருவமாகிய வ்வுலக வேறுபாடுகளை யெல்லாங் காணுமாறு யாங்ஙனம்? அல்லதூஉம் பிரமத்தைத் தவிர வேறு இரண்டாம் ஒரு பொருளில்லையாயின் அப்பிரமத்தின் கண்ணே வ்வாறு காண்பான் தான் யார்? இவ்வாறு எழூஉம் பல்வகை ஐயங்களாற் சங்கராச்சியார் உரைப்பொருள் ஒருவாற்றானும் பொருந்தாதென்பது இனிது விளங்க லானும், அவருரை, நேரிடையாகக் கண்டறியப்பட்டு எல்லாரானுந் தழீஇக் கொள்ளப்படும் விஞ்ஞான நூற் பொருளோடு இணங்காமல் மாறுகொண்டழிதலானும் சங்கராச்சாரியாரைப் போலவே பிரமத்தைத் தவிர மற் றொழிந்த பொருளெல்லாம் பொய்யாமென்றுரைத்த கான்ட், ஈகிள், பிநோஸா முதலான ஐரோப்பிய அறிஞர் களின் கோட்பாடெல்லாம் விஞ்ஞானநூற் பொருளோடு ஒற்றுமையுறுதலின்றிப் பொய்படுகின்றவென்று அவை செய்து நன்றாராய்ச்சி நூ லழு திய குரும்ராபர்ட்சன் என்னும் ஆங்கில அறிவுநுாற் புலவர் உண்மை தோன்ற நிலையிட்டு உரைத்தலானும் உலகம் பொய்யென்று அங்ஙனங் கூறுவாருரை பொய்யாமென்று மறுக்க.

யல்லாம்

இனி, இங்ஙனம், வெறும்பாழினின்று உலகைப் படைத்தான் என்றும், றைவனே உலகமாய்த் தோன்றினா னென்றும், இறைவன்கண் இவ்வுலகமும் பிறவு மெல்லாம் மயக்கவுணர்வாகத் தோன்றும் பொய்ப் பொருள்களா மென்றுங் கூறுந் சமயிகள் உரை அறிவு நூல் தருக்க நூல் பௌதிகநூல் முதலியவற்றிலுண்மைப் பொய்ப் பொரு ளோடு ஒற்றுமைப்படாமையான், அச்சமயிகளெல்லாம் சமய நுாலொடு தத்துவநூல் தருக்க நூல் பௌதிக முதலியவற்றின் பொருளியையா, மற்று அவை வொன்றுந் தத்தம் நிலையில் மேற்கோளாம் இந்நான்

நூல் ஒவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/297&oldid=1585909" இலிருந்து மீள்விக்கப்பட்டது