உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

265

கனையும் ஒன்று சேர்த்து இணக்கியாராய்தல் பொருந்தா தென்று தமக்குத் தோன்றியவாறே கூறி இழுக்குறுகின்றார். யாதாயினும் ஒரு சமயம் மெய்ச்சமயமானால் அச் சமயப் பொருள் எல்லா நுால்களினுண்மைப்பொருளோடும் ஒருமையுற்று எடுத்துக்காட்டாக நிலையுறுதலுறும்.

66

என

ஒருசமயம் பொய்ச்சமயமாயின் அதன் பொ ரு ள் மற்றை உண்மைநுற் பொருளோடும் இணங்காமல் மாறுகொண்டு அழிவெய்தும், அற்றேல் அவ்வெல்லா உண்மை நூல் பொருளொடும் யைபுற்று எடுத்துக் காட்டாய் நிலையுஞ் சமயம் ஒன்று உண்டோவெனின்;- உண்டு. அது தான் சித்தாந்த சைவசமயமாம். யாங்ஙனமோ வெனிற் காட்டுதும். ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், சிவஞான போதத்தில் ஈசுர நிச்சயம் பண்ணுகின்ற முதற் சூத்திரத்திலே உலகாயத சமயியை மறுத்துத் “தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின்” என்று உலகத்தை எக்காலத்தும் உள் பொருளென்றே நிலையிட்டு உரைத்த லானும், உலகம் இல்பொருளாய் வெறும் பாழினின்றே தோன்றி நின்று அழியுமெனக் கூறும் புத்தரை மறுத்து உலகமுள்ளது, இல்லதற்குத் தோற்றமின்மையின் வைத்துச் சித்தாந்தப் படுத்திக் கூறலானும் பிறவாற்றானும் என்பது. இவ்வாறு வ்வாறு சித்தாந்த சைவம் போதிக்குஞ் சிவஞான போதத்தின்கட் போந்த மெய்ப்பொருள்க எல்லாம் ஏனைத் தத்துவ தருக்க பௌதிக நுால்களின் உண்மைப் பொருளோடொருமையுற்று இணங்கி மற்றைச் சமய முடிபொருட்கெல்லாந் தலைமையாய் அமர்ந்திருக்குந் தெய்வப் பெற்றிமை தேறவல்லார்க்கு மெய்யாக நிலை பெறுஞ் சமயமொன்று ஏனை நன்பொருணூால்களொடு மாறுபாடுதல் ஒரு ஒரு சிறிதுமில்லையென்பது னிது விளங்கும். இன்னுஞ் சமயம் நேரும்போதெல்லாம் சைவ சித்தாந்தப் பொருளொன்றுமே ஏனை உண்மைப் பொரு ணூல்களோடு ணங்குமாறும், மற்றைச் சமயப் பொருள்கள் அவ்வாறு இணங்காமை முறையே தந்து காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/298&oldid=1585910" இலிருந்து மீள்விக்கப்பட்டது