உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

11. சைவமும் சைவர் நிலையும்

சிவபெருமானொருவனே வழிபடற்பாலனாகிய முழு முதற் கடவுளென்றும் அங்ஙனம் அவனை வழிபடுவார்க்கு இன்றியமையா அடையாளங்களாவன திருநீறு சிவமணி யணிதலும் திருவைந்தெழுத்தோதலுமேயா மென்றும் இவற்றையெல்லாம் ஆன்மாக்கள் இனிதுணருமாறு சுருக்க

வட

மாகவும் விரிவாகவுந் தெரிக்கலுறும் நூல்கள் மொழியில் வேதசிவாகமங்களுந் தென்மொழியில் தேவார திருவாசக முதலிய பன்னிரண்டு திருமுறைகளும் சிவஞான போத முதலிய பதினான்கு சித்தாந்த அருளோத்துக்களு மாமென்றும் ஆணைவரம்பு நிறுத்தி அவ்வரம்பு கடவாது ஒழுகும் நல்லான்மாக்களுக்கு வீடு பேற்றின்பம் பயப்பது சைவசமயமாம்; இங்ஙனம் கிளந்தெடுத்துக்கூறிய சைவசமய வழிநின்று அச்சமயவிதிகளை வழுவாது கடைப்பிடித்து ஒழுகுங் கடப்பாடுடைய நன் மக்களெல்லாருஞ் சைவ ரென்று வேண்டப்படுவர்.

இனித் துரியப்பொருளாகிய சிவனை வழிபடுதலும், அவனடையாளங்களாகிய திருநீறு சிவமணியணிதலும் இவற்றை யறிவிக்குந் தேவார திருவாசக முதலிய நூலா ராய்ச்சியுமாகிய மூன்றும் ஒன்றை ஒன்று இன்றியமையா நெறிப்பாடுடையனவாம்.

இங்கே சிவம் என்ற துரியப்பொருள் பிரமன் விண்டு உருத்திரன் என்று அண்டாண்டு உபநிடதங்களில் ஓதப் படும் முப்பொருள்களும் இறுதியில் நின்ற உருத்திரபத வாச்சியப் பொருளன்று. மற்று அது குணப்பொருளாகிய அம் மூன்றனையுங் கடந்து மேல்விரிந்து செல்லும் நான் காவதாகிய துரியப்பொருளாவதாம். இக்கருத்துப் பற்றியே அதர்வசிகோப நிடதத்தில் “இவையனைத்தும் பிறக்கின்றன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/299&oldid=1585911" இலிருந்து மீள்விக்கப்பட்டது