உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

267

ப்பிரமன் விண்டு உருத்திரன் இந்திரனென்னுமவரெல் லாம் பிறக்கின்றனர்; பூதங்களோடு புலன்களெல்லாம் பிறக்கின்றன; காரணங்களைத் தோற்றுவிப்பானுந் தியாதாவுமான காரணன்றான் பிறப்பானல்லான்; காரணப் பொருளும், செல்வ மனைத்தையுமுடையானும் அனைத் திற்கும் ஈசுரனுமான சம்பு விண் நடுவிற் றியானிக்கப்படும் என்றும், பஞ்சப்பிரமோப நிடதத்தில் "மூன்றவத்தைகளைக் கடந்ததும் துரியப் பொருளும் மெய்ம்மையானதும் ஞான மயமாக வுள்ளதும் நான்முகன் திருமால் முதலியோராற் போற்றப்படுவதும் எப்பொருளும் பிறத்தற்கு நிலைக் களமாவதும் மேலானதும் ஈசபத வாச்சியப்பொருள் என்றும் மறைமொழிகள் ஒருங்கெழுத்து அறுதியிட்ட இவ்வாறே "தேவர்கோ வறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை, மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்தெந்தை என்று திருவாசகத் தமிழ்மறையினும் போந்தவாறு காண்க.

ன.

இனிச் சுவைதாசுவதரவுபநிடதத்திற் போந்த “எவன் தானொருவனாயிருந்துகொண்டே எல்லாப் பொ ாருள் களையு மயக்குவானோ அவன் தன் முழுவல்லமையால் எல்லாவற்றையும் எல்லாவுலகங்களையும் ஆளுகின்றான்;

எவன் தோன்றுங்காலத்தும் நிகழுங்காலத்துந் தான் ஒருவனாகவே இருக்கின்றானோ அவனை அவ்வாற்றான் அறிபவர் இறத்தலைக் கடக்கின்றார்கள். ஏனெனில், இவ்வுலகங்களையெல்லாந் தன் முழுமுதன்மையால் ஆட்சி செய்கின்ற உருத்திரக்கடவுள் ஒருவனேயாதலால் அவனுக்கு வேறாகப் பிறிதொரு பொருள் உண்டென்று அறிவுடை யோர் சொல்லார்கள்; அவன் படைப்பானொருவனை உண்டாக்கி எல்லாவுலகங்களையும் படைப்பித்துத் தான் அவ்வெல்லா ஆன்மாக்களிலும் உயிர்க்குள்ளுயிராய் வேறுவே றமர்ந்திருக்கின்றான்; அவன் ஊழிக் காலத்தில் தன் சினத்தீயால் எல்லாவற்றையும் விழுங்குகின்றான்; எல்லாப் பக்கங்களில் விழிகளும், எல்லாத் திக்குகளின் முகங்களும், எல்லாத் திக்குகளிற் புயங்களும், எல்லாவிடங்களிற் பாதங் களும் உடையனாய் விண்ணையும் மண்ணையும் உண்டு பண்ணித் தன் கைகளானும் சிறகுகளானும் அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/300&oldid=1585912" இலிருந்து மீள்விக்கப்பட்டது